பெற்றோரை இழந்த பச்சிளங்குழந்தை; பேணி வளர்க்க போட்டா போட்டி

பெற்றோரை இழந்த பச்சிளங்குழந்தை; பேணி வளர்க்க போட்டா போட்டி

2 mins read
89b10dfe-31bf-4da4-959f-5b313e7a255d
-

தமி­ழ­கத்­தின் உசி­லம்­பட்டி அருகே உள்ள பெரு­மாள்­பட்டி எனும் ஊரைச் சேர்ந்த பிர­வீ­னும் அவர் மனைவி தமிழ்ச்­செல்­வி­யும் சென்ற ஆண்டு மே மாதம் இரண்­டாம் தேதி உயிரை மாய்த்­துக்­கொண்­ட­னர். அவர்­க­ளுக்கு இரண்டு வய­தில் விஸ்­வத் மிலன் என்ற மகன் உள்­ளான்.

சம்­ப­வத்­தை­ய­டுத்து பிர­வீன், தமிழ்ச்­செல்வி இரு­வ­ரின் உடல்­களை இந்­தி­யா­விற்­குக் கொண்­டு­வந்து இறு­திச்­ச­டங்­கு­க­ளைச் செய்­த­னர் உற­வி­னர்­கள். குழந்தை மிலன் அமெ­ரிக்­கா­வில் பிறந்­த­தால் அவ­னுக்கு அமெ­ரிக்­கக் குடி­யு­ரிமை உண்டு.

மிசிசிப்பி குழந்­தைப் பாது­காப்பு அமைப்­பி­டம் மிலன் ஒப்­ப­டைக்­கப்­பட்­டான். இந்­தி­யா­வில் வசிக்­கும் அவ­னது உற­வி­னர்­கள் மிலனை இந்­தியா அழைத்­து­வர முற்­பட்­ட­னர். உரிய அனு­மதி பெற்று குழந்­தையை அழைத்­துச் செல்­லும்­படி அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் கூறி­விட்­ட­னர்.

தமிழ்ச்­செல்­வி­யின் தங்கை தனது அக்கா மகனை இந்­தியா அழைத்­து­வ­ரு­வ­தற்­காக அமெ­ரிக்கா சென்­றார். ஆனால் அங்கே சென்ற பிறகு, குழந்தை வட இந்­தி­யத் தம்­ப­திக்கு தத்­துக் கொடுக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

முன்­ன­தாக பிர­வீன்- தமிழ்ச்­செல்­வி­யின் குழந்­தைக்­காக 'கோஃபண்ட்மீ' எனும் அமைப்பு மூலம் ஏறக்­கு­றைய 2.5 கோடி ரூபாய் நிதி திரட்­டப்­பட்­டது. மேலும் மில­னைத் தத்­தெ­டுக்க யாரும் முன்­வ­ர­லாம் என்­றும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கத் தெரி­கிறது.

இதை­ய­டுத்தே வட இந்­தி­யத் தம்­பதி நீதி­மன்­றத்­தில் மில­னைத் தத்­தெ­டுக்க அனு­மதி கோரி விண்­ணப்­பம் செய்­தி­ருந்­த­னர். தற்­கா­லிக அனு­ம­தி­யும் அவர்­க­ளுக்­குக் கிடைத்­த­தா­கக் கூறப்­பட்­டது.

தமிழ்ச்செல்வியின் தங்கை மிலனைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் நோக்கில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். தத்து எடுத்த தம்பதி இந்தியாவில் மிலனுக்குப் பாதுகாப்போ உரிய வசதிகளோ கிடைக்காது என்று வாதிட்டனர்.

அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்கீழ், தமிழகத்தில் ஒரு சிறப்புக் குழு மிலனின் தாத்தா, பாட்டியின் கிராமத்திற்குச் சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பித்தது. குழந்தைப் பாதுகாப்பு அமைப்பு அதற்கு ஒப்புதல் அளித்த பிறகும் வட இந்தியத் தம்பதி குழந்தையைத் தர மறுக்கின்றனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்கான வாரியத்தின் கவனத்துக்கு இதுகுறித்துத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் தமிழ் அமைப்புகள் குழந்தையை மீட்பதில் தங்களுக்கு உதவ வேண்டும் என்று மிலனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் மத்திய அரசு இதில் தலையிட்டு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.