'சிங்கப்பூரர்கள் அனைவரும் பங்காற்ற வேண்டும்'

'சிங்கப்பூரர்கள் அனைவரும் பங்காற்ற வேண்டும்'

2 mins read
4109c1ab-64ea-47e7-94fa-ec3eb15ab3e2
-

நீடித்த நிலைத்தன்மை உடைய தண்ணீர் விநியோகம் குறித்து துணைப் பிரதமர் வோங்

உல­கம் தண்­ணீ­ருக்­கான நெருக்­க­டியை எதிர்­நோக்­கும் நிலை­யில், விலை­ம­திப்­பில்லா பொக்­கி­ஷம் போன்ற தூய்­மை­யான, நன்­னீரை சிங்­கப்­பூ­ரர்­கள் எளி­தா­கக் கரு­தக்­கூ­டாது என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

மரினா அணைக்­கட்­டில் நேற்று நடை­பெற்ற சிங்­கப்­பூர் உல­கத் தண்­ணீர் தினக் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­யில் அவர் உரை­யாற்­றி­னார். பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் அந்­நி­கழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. நிகழ்ச்­சி­யில், நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ, மூத்த துணை­ய­மைச்­சர் ஏமி கோர் ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

திரு வோங் தமது உரை­யில், "போதிய தண்­ணீர் கிடைக்­கா­மல் உல­கெங்­கும் பில்­லி­யன் கணக்­கா­னோர் தவிக்­கின்­ற­னர். ஆசி­யாவை மட்­டும் எடுத்­துக்­கொண்­டா­லும் பல மில்­லி­யன் பேருக்கு இன்­னும் தூய்­மை­யான நீரோ, குடிநீரோ கிடைப்­ப­தில்லை," என்று குறிப்­பிட்­டார்.

"நிலைமை மேலும் மோசம் அ­டை­யக்­கூ­டும். ஏனெ­னில் 2030ஆம் ஆண்­டுக்­குள் உல­க­ளா­விய நிலை­யில் நன்­னீ­ருக்­கான தேவை அதன் விநி­யோக அள­வைக் காட்­டி­லும் 40 விழுக்­காடு அதி­க­ரிக்­கும் என்று வல்­லு­நர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். மிக அதி­க­மான பயன்­பாடு, முறை­யற்ற நீர் நிர்­வா­கம் ஆகி­யவை இதற்­குக் கார­ணங்­கள்," என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் தண்­ணீர் விநி­யோ­கம் கடந்த பல ஆண்­டு­களில் மேம்­பட்­டி­ருந்­தா­லும் எதிர்­கா­லத் தேவைக்­குப் போதிய தண்­ணீர் கிடைப்­பதை உறு­தி­செய்ய, கூடு­தல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றார் அவர்.

மக்­கள்தொகை அதி­க­ரிப்பு, பொரு­ளி­யல் தேவை­கள் ஆகி­ய­வற்­றால் அடுத்த 30 ஆண்­டு­களில் சிங்­கப்­பூ­ரின் தண்­ணீர்த் தேவை இரு மடங்­கா­கும் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்­ப­தைத் திரு வோங் சுட்­டி­னார்.

"இதற்­கி­டையே பரு­வ­நிலை மாற்­றத்­தால் உல­கெங்­கும் வானிலை கணிக்க இய­லாத நிலை­யில் உள்­ளது. சிங்­கப்­பூ­ரி­லும் வழக்­கத்­திற்கு மாறாக கன­மழை பெய்­கிறது. அதே­போல் அடிக்­கடி பல நாள் மழை இல்­லா­ம­லும் இருக்­கிறது.

"எனவே, தொடர்ந்து முன்­கூட்­டியே திட்­ட­மி­டு­தல் அவ­சி­யம். உரிய வகை­யில் உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை அமைக்க வேண்­டும். நீடித்த நிலைத்­தன்மை முறை­யில் நாட்­டின் தண்­ணீர் விநி­யோ­கத்­தைப் பெற உத­வும் புதிய தொழில்­நுட்­பங்­களில் முத­லீடு செய்­வது முக்­கி­யம்," என்­றார் திரு வோங்.

1950கள், 1960களில் நில­விய வாழ்க்­கை­முறை பற்­றித் தமது தாயார் கூறி­யதை அவர் நினை­வு­கூர்ந்­தார். 1963ல் வறட்சி நில­வி­ய­போது, 10 மாதங்­களுக்கு தண்­ணீர்ப் பங்­கீட்டு முறை அம­லில் இருந்­த­தை­யும் வாரத்­தில் மூன்று நாள்­க­ளுக்கு கிட்­டத்­தட்ட ஒரு நாளின் பாதி நேரம் தண்­ணீர் விநி­யோ­கம் தடை­செய்­யப்­படும் என்­ப­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

"வர்த்­த­கங்­கள், அமைப்­பு­கள், பொது­மக்­கள் என அனை­வ­ரும் அவ­ர­வர் பங்கை ஆற்­று­வது முக்­கி­யம். சிங்­கப்­பூ­ரின் இன்­றைய நிலைக்கு கூட்டு முயற்­சி­களே முக்­கி­யப் பங்­காற்­றின," என்­றார் அவர்.

"நாட்­டின் வளர்ச்­சிக்­கும் தண்­ணீர் பாது­காப்­பி­லும் இத்­த­கைய ஒத்­து­ழைப்பு தொட­ர­வேண்­டும். சவால்­க­ளைக் கடந்து நடை­போட அது முக்­கி­யம்," என்­றார் அவர்.