ஆசியாவில் முதலாவதாக புதிய 'நியூமோகாக்கல்' தடுப்பூசி

ஆசியாவில் முதலாவதாக புதிய 'நியூமோகாக்கல்' தடுப்பூசி

1 mins read
e3b10b08-9c80-4bbf-8acd-2f7d43e501b2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நிமோ­னியா காய்ச்­சலை உரு­வாக்­கும் 'ஸ்ட்­ரெப்­டோ­காக்­கஸ் நிமோ­னியே' நுண்­ணு­யி­ரிக்கு எதி­ரான புதிய தடுப்­பூ­சி­யைத் தயா­ரித்­துள்­ளது 'ஃபைசர்' நிறு­வ­னம். தற்­போது பயன்­பாட்­டில் உள்ள இரண்டு வகைத் தடுப்­பூ­சி­க­ளை­விட இது கூடு­தல் திறன்­மிக்­கது எனக் கூறப்­ப­டு­கிறது.

புதிய 'பிசிவி20 நியூ­மோ­காக்­கல்' தடுப்­பூ­சி­யைப் பெறும் முதல் ஆசிய நாடு சிங்­கப்­பூர்.

நுரை­யீ­ரல் அழற்­சியை ஏற்­ப­டுத்­தும் நிமோ­னியா காய்ச்­சல் மட்­டு­மன்றி, மூளைக்­காய்ச்­சல், சைனஸ் பிரச்­சினை, காதின் நடுப்­ப­கு­தி­யில் உண்­டா­கும் தொற்று போன்­றவை ஏற்­ப­ட­வும் இந்த நுண்­ணு­யி­ரி­கள் கார­ண­மாக இருக்­கக்­கூ­டும்.

இந்­தப் பிரச்­சி­னை­க­ளால் உடல்­ந­லம் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டு­வ­து­டன் சில நேரங்­களில் மர­ணம் ஏற்­ப­ட­வும் வாய்ப்­புண்டு.

சிங்­கப்­பூ­ரில் மர­ணம் ஏற்­ப­டுத்­தும் நோய்­க­ளின் பட்­டி­ய­லில் மூன்­றா­வது நிலை­யில் உள்­ளது நிமோ­னியா காய்ச்­சல்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளான முதி­யோ­ருக்­கும் குழந்­தை­க­ளுக்­கும் அர­சாங்­கம் குறைந்த விலை­யில் நிமோ­னியா தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்ள மானி­யம் வழங்­கு­கிறது.

வேறு சில நுண்­ணு­யி­ரி­கள், பூஞ்சை வகை­கள் ஆகி­ய­வற்­றா­லும் நிமோ­னியா காய்ச்­சல் ஏற்­ப­டக்­கூ­டும். இருப்­பி­னும் பொது­வாக 'ஸ்ட்­ரெப்­டோ­காக்­கஸ் நிமோ­னியே' நுண்­ணு­யி­ரி­யால்­தான் அது அதி­க­மாக ஏற்­ப­டு­கிறது.

தற்­போ­தைய நடை­மு­றை­யின்­கீழ், 'பிசிவி13' எனும் தடுப்­பூ­சியை முத­லில் போட்­டுக்­கொண்டு, ஓராண்டு கழித்து 'பிபி­எஸ்23' எனும் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும். புதிய தடுப்­பூசி இவ்­வி­ரண்­டுக்­கும் மாற்­றாக அமை­யும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

'பிசிவி13' தடுப்­பூ­சி­யை­வி­டக் கூடு­த­லாக ஏழு வகை­யான நுண்­ணு­யி­ரித் திரி­பு­களை எதிர்க்­கும் ஆற்­றல் கொண்­டது 'பிசிவி20'.