விடைபெறுகிறார் சிங்கப்பூரின் நவரச நாயகன்

விடைபெறுகிறார் சிங்கப்பூரின் நவரச நாயகன்

3 mins read
c285333a-8067-4266-b040-777c53e4c3b0
-

ரச்சனா வேலாயுதம்

சிங்­கப்­பூர் தமிழ் வானொலி, மேடை நாட­கங்­கள், தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் முத்­திரை பதித்த திரு ரெ.சோம­சுந்­த­ரம் நேற்று முன்­தி­னம் மாலை 5.15 மணி­ய­ளா­வில் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யில் கால­மா­னார். அவ­ருக்கு வயது 75.

கிட்­டத்­தட்ட 50 ஆண்­டு­களுக்கு மேலாக, ஏரா­ள­மான நாட­கங்­களை எழுதி, இயக்கி, இவர் நடித்­துள்­ளார்.

"தமிழ்­மொ­ழி­யை­யும் இலக்­கி­யத்­தை­யும் மக்­க­ளி­டம் கொண்­டு­செல்­வ­தில் என் தந்தை தீவி­ர­மா­கச் செயல்­பட்­டார். சமூக சேவை­யி­லும் ஈடு­பட்டு வந்­தார். வேலை இருந்­தா­லும் பிள்­ளை­கள், பேரப்­பிள்­ளை­க­ளுடன் நேரம் செல­விட முயற்சி செய்­வார். அப்­பா­வின் மறைவு எங்­கள் குடும்­பத்­திற்­கும் கலை­யு­ல­கத்­திற்­கும் பேரி­ழப்பு," என்றார் அவ­ரது இளைய மகன் கார்த்­தி­கே­யன் சோம­சுந்­த­ரம்.

1979ல் முழு­நேர வானொ­லிப் படைப்பாளராகப் பணி­யைத் தொடங்­கிய திரு ரெ.சோ. தமது மொழி வளம், காந்தக் குரல் ஆகி­ய­வற்­றால் குறு­கிய காலத்­தில் மக்­க­ளின் மனங்­க­ளைக் கவர்ந்­தார்.

கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ப குரலை மாற்­றிப் பேசும் திறன்­கொண்ட இவர், வானொ­லி­யில் ஒலி­ப­ரப்­பப்­பட்ட 64 அத்­தி­யா­யங்­கள் கொண்ட மகா­பா­ர­தம் தொட­ரில் துரி­யோ­த­னன் கதா­பாத்­தி­ரத்­துக்கு மெரு­கூட்­டி­னார்.

நல்­ல­தோர் வீணை, ரக­சி­யம் போன்ற பல்­வேறு தொலைக்­காட்சி நாட­கங்­களில் நடித்­தார். 2007ஆம் ஆண்டு பிர­தான விழா­வில் சிறந்த நடி­க­ருக்­கான விருதையும் 2016ல் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­தையும் பெற்­றார்.

தொடர்ந்து 14 ஆண்­டு­க­ளாக தேசிய தின அணி­வ­குப்­பின்­போது தமி­ழில் விளக்­க­வுரை ஆற்­றி­னார். வானொ­லி­யில் 32 ஆண்­டு­கள் பணி­யாற்றி ஓய்­வு­பெற்ற பிற­கும் தமிழ்ச் சமு­தா­யத்­திற்­குத் தன் பங்கை தொடர்ந்து பங்­க­ளித்­தார்.

சிங்­கப்­பூர் இந்­தி­யக் கலை­ஞர்­கள் சங்­கத்­தின் தலை­வர், தாம்­சன் சமூக மன்ற இந்­தி­யர் நற்­பணிச் செயற்­கு­ழு­வின் தலை­வர் ஆகிய பொறுப்­பு­களை வகித்த இவர், சிங்­கப்­பூ­ரில் தமிழ் தழைப்­பதற்­கான பல்­வேறு முயற்­சி­களை முன்­னெ­டுத்­தார்.

சிறு­வ­ய­தில் இந்­தி­யா­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த இவர் பல சவால்­க­ளைக் கடந்து கலை உல­கில் தார­கை­யாய் மின்­னி­னார். இவ­ரது வாழ்க்­கைக் கதையை 2021ல் 'ரெ சோமா' எனும் நாட­க­மாக எஸ்­பி­ள­னேட் அரங்­கில் படைத்­தது 'அகம் தியேட்­டர் லேப்'. "சிங்­கப்­பூர் நாட­கத்­ து­றைக்­குக் கிடைத்த பொக்­கி­ஷம் திரு சோம­சுந்­த­ரம். மேடை நாட­கக் கலைக்கு உயி­ரூட்­டி­ய­வர்­களில் ஒரு­வர். நான் இயக்­கிய நகைச்­சுவை நாட­கத்­தில் அவரை அறி­மு­கப்­ப­டுத்தி நடிக்க வைத்­தது மறக்க முடி­யாத அனு­ப­வம்," என்­றார் சிங்­கப்­பூ­ரின் மூத்த எழுத்­தா­ள­ரும் தமிழ் வானொலியின் முன்னாள் மூத்த நிர்வாகத் தயாரிப்பாளருமான பி.கிரு­‌ஷ்­ணன், 91.

"தமிழ் வானொலியில் சேர்ந்­த­போது எனக்கு வழி­காட்­டி­யாக இருந்­த­வர்­களில் குறிப்­பி­டத்­தக்­க­வர் திரு ரெ. சோ. மிக­வும் இனி­மை­யா­ன­வர். நானும் அவ­ரும் இணைந்து நேர­டிக் காற்­பந்­தாட்ட வர்­ண­னை­கள் செய்­துள்ளோம். இரா­மா­ய­ணம் வானொலி நாட­கத்­தில் இராவ­ண­னாக அவ­ரும் அனு­ம­னாக நானும் நடித்ததை மறக்க முடி­யாது," என்­கி­றார் தமிழ் முர­சின் இணை ஆசி­ரி­யர் வீ.பழ­னிச்­சாமி.

"அவர் குர­லில் கர்ஜனை­யும் இருக்­கும்; சாந்­த­மும் நில­வும். நடிப்­பில் கம்­பீ­ர­மும் கனி­வும் இருக்­கும்," என்று உள்­ளூர்க் கலை­ஞர் ச. வடி­வ­ழ­கன் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

மனைவி சரோஜா, மகன்­கள் சிவ­மு­ரு­கன், கார்த்­தி­கே­யன், மகள் புனி­தம், மரு­ம­கன் கணேஷ், மரு­ம­கள் கார்த்­திகா, நான்கு பேரக்­கு­ழந்­தை­கள் ஆகி­யோரை அவர் விட்­டுச்­சென்­றுள்­ளார்.

இன்று பிற்­ப­கல் 4 மணிக்கு புளோக் 631 அங் மோ கியோ அவென்யூ 4, #06-942ல் அவரின் இறு­திச்­ச­டங்கு இடம்­பெ­றும். மாலை 6 மணிக்கு மண்­டாய் தக­னச் சாலைக்கு அவ­ரது நல்­லு­டல் எடுத்­துச்­செல்­லப்­பட்டு, ஹால் மூன்­றில் எரி­யூட்­டப்­படும் என்று குடும்­பத்­தி­னர் கூறினர்.