கொள்ளைநோய்க்குப் பின்னர் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம்

கொள்ளைநோய்க்குப் பின்னர் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம்

3 mins read

பெரும்­பா­லான சிங்­கப்­பூர்­வா­சி­கள் தங்­க­ளது வாழ்க்­கைத்­த­ரம் கொவிட்-19 கொள்­ளை­நோய்க்கு முந்­திய நிலை­யைப் போல அல்­லது அதை­விட மேம்­பட்ட நிலை­யில் உள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர். தொடர்பு, தக­வல் அமைச்சு நடத்­திய கருத்­தாய்­வில் பங்­கேற்­றோ­ரில் 72 விழுக்­காட்­டி­னர் அவ்­வாறு கூறி­னர்.

இணை­யம் வழி­யாக நடத்­தப்­பட்ட ஆய்­வில் கலந்­து­கொண்­டோ­ரில் 10ல் 7 பேர், அர­சாங்­கத்­தா­லும் இங்­குள்ள சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வச­தி­க­ளா­லும் வருங்­கால கொள்­ளை­நோ­யைச் சமா­ளிக்க முடி­யும் என்று நம்­பு­கின்­ற­னர். இன்­னொரு கொள்­ளை­நோய் உரு­வெ­டுத்­தால் சிங்­கப்­பூர் அதனை வெற்­றி­க­ர­மா­கக் கடந்­து­வி­டும் என்று 75 விழுக்­காட்­டினர் நம்­பிக்கை தெரி­வித்­த­னர். அதே­நே­ரம், அப்­படி ஒரு நிலையை எப்­ப­டிக் கையாள்­வது என்­பதை அர­சாங்­கம் தெரிந்து வைத்­தி­ருப்­ப­தாக 71 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

வாழ்க்­கை­யின் பல்­வேறு அம்­சங்­களில் கொவிட்-19 கொள்­ளை­நேய் ஏற்­ப­டுத்தி இருக்­கும் தாக்­கம் குறித்து அறிய, 15 வய­துக்­கும் மேற்­பாட்­டோ­ரி­டம் நடத்­தப்­பட்ட கருத்­தாய்­வில் 1,052 பேர் கலந்­து­கொண்­ட­னர். ஆய்வு முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன. கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலை­யோடு ஒப்­பி­டு­கை­யில் தங்­க­ளது அண்­டை­வீட்­டா­ரு­ட­னான உற­வில் பலம் கூடி­யி­ருக்­கிறது அல்­லது முன்­

பி­ருந்த நிலைக்­குத் திரும்பி இருக்­கிறது என்று 82 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

குடும்­பத்­தில் உள்­ளோ­ரு­ட­னான உற­வின் நிலை­யும் இதே­போல இருந்­த­தாக 77 விழுக்­காட்­டி­னர் குறிப்­பிட்­ட­னர்.

கொள்­ளை­நோ­யைக் கடந்த பின்­னர் தங்­க­ளது நிதித் தேவையை நல்­ல­மு­றை­யில் சமா­ளிப்­ப­தாக அல்­லது கொள்­ளை­நோய்க்கு முன்பு சமா­ளித்­த­தைப்­போன்ற நிலை இருப்­ப­தாக 72 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

இப்­ப­டிப் பெரும்­பா­லா­னோர் சாத­க­மான பதி­லைத் தந்­தி­ருக்­கும் அதே­நே­ரம் 28 விழுக்­காட்­டி­னர் மாற்­றுக் கருத்தை வெளிப்­ப­டுத்­தி­னர். தங்­க­ளது ஒட்­டு­மொத்த வாழ்க்­கைத்­த­ரம் கொள்­ளை­நோய்க்கு முன்பு இருந்­த­தைக் காட்­டி­லும் மோச­மா­கி­விட்­ட­தாக உணர்­வ­தாக அவர்­கள் கூறி­னர்.

அதே­நே­ரம் தங்­க­ளது வாழ்க்­கை­யில் 10 அம்­சங்­கள் மேம்­பட்­டி­ருப்­ப­தாக அல்­லது மாற்­ற­மின்றி இருப்­ப­தாக 10ல் 6 பேர் கருத்­துக் கூறி­னர். குடும்­பம் மற்­றும் அண்­டை­வீட்­டா­ரு­ட­னான உற­வு­நிலை, உடல் மற்­றும் மன­நி­லை­யைப் பரா­ம­ரிக்­கும் திறன், சுகா­தா­ர­மான வேலை-வாழ்க்­கைச் சம­நி­லை­யைப் பெற்­றி­ருப்­பது போன்­றவை அந்த 10 அம்­சங்­க­ளுள் அடங்­கும். பொது­வான மீட்­சியை இது குறிப்­ப­தாக அமைச்சு கூறி­யது.

தங்­க­ளின் வாழ்க்­கைத்­த­ரம் கொள்­ளை­நோய்க்­குப் பின்­னர் குறைந்­து­விட்­ட­தாக 38 விழுக்­காட்டு இளை­யர்­கள் கூறி­னர். அவர்­கள் 15 வய­துக்­கும் 19 வய­துக்­கும் இடைப்­பட்ட வய­தி­னர். வாழ்க்­கைத்­த­ரம் சரிந்­த­தாக பொது­மக்­களில் 28 விழுக்­காட்­டி­னர் இவ்­வாறு கூறி­யி­ருந்த நிலை­யில் இளை­யர்­க­ளின் விகி­தம் அதை­விட அதி­க­மாக இருந்­ததை ஆய்வு காட்­டி­யது.

அதே­போல தங்­க­ளது மன

நிலை­யைப் பரா­ம­ரிக்­கும் திறன் குறைந்­து­விட்­ட­தாக பொது­மக்­களில் 28 விழுக்­காட்­டி­னர் கூறிய நிலை­யில் இவ்­வாறு கூறிய இளை­ய­ரின் விகி­தம் 37 விழுக்­கா­டாக இருந்­தது.

சமூக நட­வ­டிக்­கை­கள் தொடர்­பாக விதிக்­கப்­பட்ட கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளின் தாக்­கம் இளை­யர்­க­ளி­டம், குறிப்­பாக பதின்­ம­வ­ய­தி­ன­ரி­டம், அதி­கம் தென்­பட்­ட­தையே இந்த நிலை உணர்த்­து­வ­தாக அமைச்சு தெரி­வித்­தது.

ஆய்வு கண்­ட­றிந்­தவை குறித்து தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் "கொள்­ளை­நோய் நமக்கு இருண்­ட­கா­ல­மாக இருந்­தது. ஆயி­னும் அந்த மோச­மான நிலை­மை­யில் கருணை, பெருந்­தன்மை, தாராள மனப்­பான்மை போன்ற நற்­கு­ணங்­கள் வெளிப்­பட்­டன," என பதி­விட்­டுள்­ளார்.

அரசாங்கம் நடத்திய கருத்தாய்வில் 10ல் 7 சிங்கப்பூர்வாசிகள் கருத்து