வெளிநாட்டு ஊழியர் மனநலனை மேம்படுத்த கிரிக்கெட் பயிற்சி

2 mins read
914fc132-2858-4329-a4cd-9692a8caf838
-

வெளி­நாட்டு ஊழி­யர் நல்­வாழ்வு இயக்­கமான 'எஜி­ட­பிள்­யூஓ'வும் சிங்­கப்­பூர் ரோட்­டரி கிளப்­பும் இணைந்து ஆறுமாத கிரிக்­கெட் பயிற்சித் திட்­டத்தை நேற்று துவாஸ் தெற்கு பொழு­து­ போக்கு மையத்­தில் தொடங்­கின. ரோட்­டரி கிளப்­பின் மாவட்ட ஆளு­நர் ஜோயன் காம் நிகழ்­வின் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்­டார்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லின்­போது வெளி­நாட்டு ஊழி­யர்­

க­ளின் மன­ந­லம் பெரி­தும் பாதிப்பு அடைந்­ததைக் கண்­ட­றிந்த வெளி­நாட்டு ஊழி­யர் நல்­வாழ்வு இயக்­கம், அவர்­க­ளுக்­கென இத்­திட்­டத்தை வகுத்­தது.

ஏறத்­தாழ 150 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பங்­கு­பெ­றும் இத்­திட்­டத்­தில் கிரிக்­கெட் பயிற்­று­நர்­கள் ஒவ்­வொரு வார­மும் ஊழி­யர்­

க­ளுக்­குப் பயிற்சி அளிப்­பர். இவர்­களில் சிங்­கப்­பூர் தேசிய பெண்­கள் கிரிக்­கெட் அணி­யின் பயிற்­று­ந­ரும் அடங்­கு­வார்.

விளை­யாட்டு அணி சீருடை, காலணி, இதர கிரிக்­கெட் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் போன்­றவை பயிற்­சி­பெ­றும் ஊழி­யர்­

க­ளுக்கு வழங்­கப்­படும்.

"இந்­தியா, இலங்கை, பங்­ளா­தேஷ் ஆகிய நாடு­க­ளின் ஊழி­யர்­க­ளுக்கு கிரிக்­கெட் பொது­வான ஆர்­வ­மாக அமை­கிறது. இந்த ஆர்­வத்­தை­யொட்­டிய நட­

வ­டிக்­கை­களில் அவர்­கள் ஈடு­

ப­டும்­போது பல புதிய நண்­பர்­

க­ளைச் சந்­தித்து விளை­யாடி மகி­ழும் வாய்ப்பு ஏற்­படும்.

"இதன் மூலம் அவர்­க­ளின் மன­ந­லம் மட்­டு­மல்­லா­மல் உடல் நல­மும் மேம்­படும்," என்று வெளி­நாட்டு ஊழி­யர் நல்­வாழ்வு இயக்­கத்­தின் தலைமை இயக்­கு­நர் சேமு­வல் கிஃப்ட் ஸ்டீ­பன் கூறி­னார்.

ஏறக்­கு­றைய 100,000 ஊழி­யர்­கள் தங்கியுள்ள துவாஸ் வட்­டா­ரத்­தில் பொழு­து­போக்கு அம்­சங்­கள் குறை­வாக உள்ள நிலை­யில், இம்­மு­யற்சி நேரத்தை சுவா­ர­சி­ய­மான முறை­யில் செல­விட அவர்­க­ளுக்கு உத­வும் என்­றார் அவர்.

முன்பு தமது சொந்த ஊரில் நண்­பர்­க­ளு­டன் இணைந்து கிரிக்­கெட் விளை­யா­டத் தொடங்­கிய திரு தினேஷ்­கு­மார், 28, சிங்­கப்­பூ­ரில் 7 ஆண்­டு­க­ளாக பணி

­பு­ரிந்து வரு­கி­றார். தற்­போது துவாஸ் கிரிக்­கெட் அரங்­கத்­தில் விளை­யாடி வரும் இவர், கிரிக்­கெட் பயிற்­சித் திட்­டம் அறி­மு­கம் காண்­பது தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் கூறி­னார்.