பேருந்து-சுற்றுலா வேன் மோதல்: 12 சிங்கப்பூரர்கள் காயம்

பேருந்து-சுற்றுலா வேன் மோதல்: 12 சிங்கப்பூரர்கள் காயம்

2 mins read
6442454f-79a9-4f86-931a-4c60e49fe85e
-

ஜோகூ­ரில் நிகழ்ந்த சாலை விபத்­தில் 12 சிங்­கப்­பூ­ரர்­கள் காய­ம­டைந்­த­னர். அவர்­களில் ஒரு­வ­ருக்கு பலத்த காயம் ஏற்­பட்­டது. ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 5.15 மணியளவில் வடக்கு-தெற்கு விரை­வுச்­

சா­லை­யில் விபத்து நடந்­த­தாக மலே­சிய காவல்­துறை கூறி­யது.

சிங்­கப்­பூ­ரர்­கள் பய­ணம் செய்த சுற்றுலா வாக­னம் மீது மலேசியாவின் விரை­வுப் பேருந்து ஒன்று மோதி­யது. இந்த வாகனங் களுடன் மேலும் இரு வாக­னங்­களும் ஒன்­றோ­டொன்று மோதிக்கொண்டன.

மலாக்­கா­வி­லி­ருந்து 28 பய­ணி­க­ளு­டன் ஜோகூர் பாரு நோக்கி பேருந்து சென்­ற­போது விபத்­தில் சிக்­கி­ய­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

"விரை­வுச்­சா­லை­யின் இடது தடத்­தில் பேருந்து சென்­று­கொண்டு இருந்­த­போது அதன் எதிரே வந்த சுற்­றுலா வாக­னம் மீது அது மோதி­யது. மோதப்­பட்ட வாக­னம் பின்­னோக்­கிச் சென்­ற­தில், பின்­னால் வந்து­கொண்டு இருந்த இரு வாக­னங்­

க­ளும் சேதமடைந்தன," என்று மூவார் மாவட்ட காவல்­துறை தலை­வர் ரெய்ஸ் முக்­லிஸ் அஸ்­மான் அஸிஸ் மலே­சிய ஊட­கங்­க­ளி­டம் கூறி­னார்.

அந்த வாக­னத்­தில் சிக்­கிக்­கொண்ட நான்கு சிங்­கப்­பூ­ரர்­களை மீட்க தமது குழு உத­வி­ய­தா­க­வும் அவர் மலே­சிய நாளி­த­ழான பெரித்தா ஹரி­யா­னி­டம் தெரி­வித்­தார். இந்த விபத்­தில் பேருந்து ஓட்­டு­

ந­ருக்கு இலே­சான காயம் ஏற்­பட்­டது. ஆயி­னும் பேருந்­தில் இருந்த பய­ணி­கள் எவ­ரும் காய­ம­டை­ய­வில்லை.

அதே­நே­ரம் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த 11 சுற்­றுப் பய­ணி­க­ளுக்கு இலே­சான காய­மும் ஒரு சுற்­றுப்­ப­ய­ணிக்கு கடு­மை­யான காய­மும் ஏற்­பட்­ட­தாக அந்த அதி­காரி தெரி­வித்­தார்.

இருப்­பி­னும் சுற்­றுலா வாகன ஓட்­டு­ந­ருக்­குக் காயம் இல்லை. பின்­னால் வந்து மோதிய இரு வாக­னங்­களில் ஒன்­றின் ஓட்­டு­நர் காய­ம­டைந்­தார்.

காய­ம­டைந்த அனை­வ­ரும் மூவா­ரில் உள்ள சுல்­தானா ஃபாத்திமா சிறப்பு மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். பேருந்­தின் ஓட்­டு­நர் மது­பா­னம் அருந்தி உள்­ளாரா என்று அறி­வ­தற்­கான மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

இந்த விபத்து தொடர்­பில் சிங்­கப்­பூ­ரின் வெளி­யு­றவு அமைச்சை 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தாள் தொடர்­பு­கொண்­டது. பாதிக்­கப்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளு­ட­னும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரு­ட­னும் தொடர்பு­கொண்டு வரு­வ­தா­க­வும் அவர்­

க­ளுக்­குத் தேவைப்­படும் உத­வி­களை செய்து­வ­ரு­வ­தா­க­வும் அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­னார்.

"ஜோகூர் பாரு­வில் உள்ள சிங்­கப்­பூர் துணைத் தூத­ர­கத்­தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, சிங்கப்பூரர்­கள் அனு­ம­திக்­கப்­பட்டுள்ள மருத்­து­வ­

ம­னைக்­குச் சென்று அவர்­க­ளைச் சந்­தித்து தூத­ரக உத­வி­களைச் செய்து வரு­கிறது. காய­ம­டைந்த அனை­வ­ரும் விரை­வில் குண­ம­டை­வார்­கள்," என்று அந்தப் பேச்­சா­ளர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.