தலைமறைவானதால் தகவல் வெளியானது: சண்முகம் விளக்கம்

தலைமறைவானதால் தகவல் வெளியானது: சண்முகம் விளக்கம்

3 mins read
39010db8-8aad-4dd7-816e-8049c49b0db7
-
multi-img1 of 2

நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளின்­போது பொய் கூறிய சம்­ப­வம் விசா­ர­ணை­யின்­கீழ் வந்­த­தற்­குப் பிறகு திரு லீ சியன் யாங்­கும் திரு­வாட்டி லீ சுவெட் ஃபெர்னும் தலை­மறைவான­தைத் தொடர்ந்து பொது­ந­லன் கருதி அவர்­கள் தொட­ர்பான தக­வல்­களை காவல்­துறை வெளி­யிட வேண்டி வந்­த­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அவ்­வாறு தக­வல் வெளி­யிட்­ட­தில் எந்­த­வித பார­பட்­ச­மும் இல்லை என்­றும் அவர்­கள் பொய் கூறி­யதை நீதி­மன்­ற­மும் ஒழுங்­கு­முறை நடு­வர்­மன்­ற­மும் கண்­டு

­பி­டித்­த­தால் இது அர­சாங்­கப் பதி­வேடு தொடர்­பான விவ­கா­ரம் என்­றும் திரு சண்­மு­கம் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் நிறு­வ­னப் பிர­த­மர் திரு லீ குவான் இயூ­வின் உயி­லைக் கையாள்­வது தொடர்­பாக திரு­வாட்டி லீ சுவெட் ஃபெர்ன் சத்­திய பிர­மா­ணத்­தின் கீழ் பொய் கூறி­யது கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தால் அந்­தத் தம்­பதி காவல்­துறை விசா­ர­ணையை எதிர்­நோக்­கி­யது.

இம்­மா­தம் 3ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்­குப் பதி­ல­ளித்த மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் அந்­தத் தம்­ப­தி­யின் பெயரை வெளி­யிட்­டார். அது ஏன் என்­றும் தம்­பதி தொடர்­பான விசா­ரணை பற்றி தக­வல் வெளி­யி­டப்­பட்­டது ஏன் என்று தெரிந்­து­ கொள்ள விரும்­பு­வ­தாக இரண்டு உறுப்­பி­னர்­கள் மன்­றத்­தில் எழுப்­பிய கேள்­க­ளுக்கு திரு சண்­மு­கம் நேற்­றுப் பதி­ல­ளித்­துப் பேசி­னார்.

சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யைச் சேர்ந்த தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வாய், இந்த விவ­கா­ரத்­தில் காவல்­துறை இரட்­டை­நி­லை­யை­யைக் கடைப்­பி­டிக்­கி­றதா என்று வின­வி­னார். 'கெப்­பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின்' நிறு­வ­னத்­தின் முன்­னாள் நிர்­வாக ஊழி­யர்­கள் ஆறு பேர் ஊழல் குற்­றங்­க­ளுக்­காக விசா­ரிக்­கப்­பட்­ட­போது அவர்­க­ளின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்று அவர் கூறி­னார்.

பதி­ல­ளித்த திரு சண்­மு­கம், "விசா­ர­ணைக்கு உட்­பட்­டோ­ரின் பெயர்­களை சட்ட அம­லாக்க அமைப்­பு­கள் வெளி­யி­டக் கூடாது என்­பது பொது­வான கொள்கை. அவ்­வாறு செய்­வது அவ­சி­யம் என்று கருத ஏரா­ள­மான சூழ்நிலைகள் உள்­ளன," என்­றார்.

"கடந்த ஆண்டு ஆடம்­ப­ரப் பொருள்­கள் சம்­பந்­தப்­பட்ட பல்­வேறு மோச­டிக் குற்­றங்­கள் தொடர்­பில் விசா­ரிக்­கப்­பட்டு வந்த பி ஜியா­பெங், பான்­சுக் சிரி­விபா ஆகி­யோர் சிங்­கப்­பூ­ரி­லிருந்து தப்பி ஓடி­னர்.

"பொது­மக்­களில் சிலர் இது­பற்றி தெரிந்­து­கொள்ள விரும்­பும் நிலை­யில், அந்த விசா­ரணை பற்­றிய தக­வல்­களை பொது­மக்­க­ளுக்கு காவல்­துறை அறி­வித்­தது," என்­றார் அமைச்­சர்.

"அதே­போல கார்ல் லியூ என்­ப­வர் தமது குடும்­பத்­தின் முன்­னாள் பணிப்­பெண் பார்தி லியானி சம்­பந்­தப்­பட்ட வழக்கு விசா­ர­ணை­யின்­போது பொய்­யான ஆதா­ரம் அளித்­த­தற்­காக அவ­ரி­டம் காவல்­துறை விசா­ரணை நடத்­தி­யது. அவ­ரது சாட்­சி­யத்­தில் சந்­தேகம் இருப்­ப­தாக வெளி­யான தீர்ப்­பைத் தொடர்ந்து அவர் விசா­ரிக்­கப்­பட்­டார்.

"இந்த இரு உதா­ர­ணங்­களும் திரு லீ மற்­றும் திரு­வாட்டி லீக்­குப் பொருந்­தும். விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்க வேண்டி காவல்­துறை தொடர்­பு­கொண்­ட­போது இந்­தத் தம்­பதி தலை­ம­றை­வா­கி­விட்­டது," என்று திரு சண்­மு­கம் விளக்­கி­னார்.

விசா­ர­ணை­யில் இருப்­போ­ரின் பெயரை மூன்று சூழ்நிலைகளில் வெளி­யி­ட­லாம் என்று கூறிய அவர், அவற்றைப் பட்­டி­ய­லிட்­டார்.

பல்­வேறு குற்­றங்­க­ளுக்­கா­கத் தண்­டிக்­கப்­பட்ட ஒரு­வர் விசா­ரிக்­கப்­படும் வேளை­யில் தப்பி ஓட முய­லும்­போது, விசா­ர­ணைக்கு ஆளாகி இருக்­கும் ஒரு­வர், விவ­ரங்­களை அவரே வெளி­யி­டும்­போது, வழக்கு ஒன்­றின் உண்மையை காவல்­துறை தெளி­வாக்­கும்­போது - என்று மூன்று வெவ்­வேறு சூழ்­நி­லை­களில், விசா­ரிக்­கப்­ப­டு­ப­வ­ரின் பெயரை காவல்­துறை வெளி­யி­ட­லாம் என்­றார் திரு சண்­மு­கம்.