வருங்கால கொள்ளைநோயை சமாளிக்க தனித்துவ மையம்

வருங்கால கொள்ளைநோயை சமாளிக்க தனித்துவ மையம்

2 mins read
70d12d50-c56e-49cb-9d33-141e413973dc
கொள்­ளை­நோயை சிங்­கப்­பூர் சமா­ளிப்­பது தொடர்­பாக இம்­மா­தம் 8ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட 92 பக்க வெள்ளை அறிக்­கை­யை­யொட்டி அவ­ரது இந்த அறி­விப்பு இடம்­பெற்­றது. படம்: ஏஎஃப்பி -

வருங்­கால கொள்­ளை­நோ­யைச் சமா­ளிக்­கும் வகை­யில் தனித்­து­வ­மான பொது சுகா­தார மையம் ஒன்றை சிங்­கப்­பூர் நிறு­வும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

நோய்க் கட்­டுப்­பாடு மற்­றும் கொள்­ளை­நோய் நிர்­வ­கிப்­புத் திறன்­க­ளை­யும் நிபு­ணத்­து­வத்­தை­யும் அந்த மையம் ஒருங்­கி­ணைக்­கும் என்­றார் அவர்.

அத்­து­டன் கொள்­ளை­நோய் சமா­ளிப்­புக்­குத் தயா­ரா­கும் வகை­யில் தனித்­து­வ­மான முன்­கூட்­டித் திட்­ட­மி­டும் குழு ஒன்­றும் அமைக்­கப்­படும் என்­றும் திரு வோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் குறிப்­பிட்­டார்.

"பொது சுகா­தா­ரத்­திற்­கான இந்­தத் தனித்­துவ மையம் தொடர்­பான திட்­டங்­களை சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் விரை­வில் விளக்­கு­வார். இதர நாடு­கள் அமைத்­துள்ள நோய்க்­கட்­டுப்­பாட்டு மையம் போல இது இருக்­கும்," என்­றார் திரு வோங்.

தனித்­துவ பொது சுகா­தார மையம் சிங்­கப்­பூர் அதன் பொது சுகா­தா­ரத் திறன்­களை காலப்­போக்­கில் வளர்த்­துக்­கொள்ள உத­வும்.

அதே­நே­ரம், அடுத்த சுற்று கொள்­ளை­நோயை சிறந்த முறை­யில் எதிர்­கொள்ள தனித்­துவ திட்­டக் குழு நாட்­டுக்கு உத­வும்.

அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைக்­கும் நோய் சூழல் உரு­வா­கும்­போது அதனை நோக்கி அதிக ஆற்­ற­லு­டன் நட­வ­டிக்­கை­க­ளைத் திருப்­பி­வி­டு­வ­தற்­கும் குழு கைகொ­டுக்­கும் என்று துணைப் பிர­த­மர் விளக்­கி­னார்.

கொள்­ளை­நோயை சிங்­கப்­பூர் சமா­ளிப்­பது தொடர்­பாக இம்­மா­தம் 8ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட 92 பக்க வெள்ளை அறிக்­கை­யை­யொட்டி அவ­ரது இந்த அறி­விப்பு இடம்­பெற்­றது.

வருங்­கா­லக் கொள்­ளை­நோ­யைச் சமா­ளிப்­ப­தில் ஏற்­பட்ட தவ­று­க­ளைக் களைந்து, வெற்றி கர­மா­கப் பெற்ற அனு­ப­வங்­க­ளின் அடிப்­ப­டை­யில் நாட்டை உரு­வாக்­கு­வ­தற்­கான திட்­டங்­களை அந்த அறிக்கை உள்­ள­டக்கி இருந்­தது.

கொள்­ளை­நோயை சிங்­கப்­பூர் சமா­ளிப்­பது தொடர்­பான தீர்­மா­னத்­தின் மீது நேற்று நடை­பெற்ற விவா­தத்­தில் பங்­கேற்று திரு வோங் பேசி­னார். அமைச்­சர்­கள், எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங், உறுப்­பி­னர்­கள் உட்­பட 22 பேர் நேற்று இந்த விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசி­னர்.

அப்­போது அவர் கூறு­கை­யில், "கொவிட்-19 கொள்­ளை­நோ­யு­டன் வாழும் வகை­யில் நாம் இப்­போது முழு­மை­யாக மாறி­விட்­டோம். கிருமி நம்­மி­டத்­தில் இன்­னும் உள்­ளது. ஆயி­னும் அது தொடர்ந்து எவ்­வாறு உரு­வெ­டுக்­கும் என்று யாரா­லும் கணிக்க இய­லாது.

"நிலைமை படிப்­ப­டி­யாக மாறு­வ­து­போல இப்­போது தோன்­றி­னா­லும் நாம் நமது சமா­ளிப்­புத் திறனை கொண்­டி­ருக்க வேண்­டும். அடுத்­த­கட்ட கிரு­மிப் போராட்­டம் எப்­போது உரு­வெ­டுத்­தா­லும் அதனை எதிர்­கொள்ள நாம் தயா­ராக இருத்­தல் வேண்­டும்," என்­றார் அவர்.

"சிங்­கப்­பூர் ஒவ்­வொரு முறை­யும் நெருக்­க­டி­யைச் சந்­திக்­கத் தயா­ரா­கும்­போது முழு­மை­யற்ற தக­வ­லா­கவே முத­லில் இருக்­கும். கொவிட்-19 எப்­படி கணிக்க முடி­யா­த­தா­க­வும் சிக்­கல் நிறைந்­த­தா­க­வும் அதே­நே­ரம் வேக­மா­கப் பர­வக்­கூ­டி­ய­தா­க­வும் இருந்­ததோ அதைப்­போ­லத்­தான் ஒரு நெருக்­கடி உரு­வா­கும்."

"நாம் எதிர்­நோக்­கும் ஒவ்­வொரு புதிய நோய்க்­கி­ரு­மி­யும் அறி­யாத ஒன்­றைக் கையாள்­வ­தைப்­போல இருக்­கும். மேலும் பல­த­ரப்­பட்ட 'மோச­மான நிகழ்­வு­க­ளுக்கு' தீர்வு காண்­பது செல­வு­மிக்க ஒன்­றாக இருக்­கும் என்­ப­தைத் தவிர்க்க இய­லாது."

"கொள்­ளை­நோ­யைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் $100 பில்­லி­யன் மதிப்­பி­லான வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை நிறை­வேற்­றி­யது. இறு­தி­யாக, 2020 நிதி ஆண்­டி­லும் 2021 நிதி ஆண்­டி­லும் அந்­தத் தொகை­யில் $72.3 பில்­லி­யன் செல­வி­டப்­பட்­டது. அவ்­வாறு செல­விட்­டது விவே­க­மா­ன­தா­க­வும் மோச­மான விளை­வு­க­ளைத் தவிர்க்­கக்கூடி­ய­தா­க­வும் இருந்­தது," என்­றார் திரு வோங்.