கொவிட்-19 கொள்ளைநோயை எதிர்த்துப் போராடிய முன்களப் பணியாளர்களுக்கு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்றத்தின் பொது மாடத்தில் 100 முன்களப் பணியாளர்களைக் கொண்ட குழு அமர்ந்திருந்தது.
தாதியர், மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூக சேவை நிபுணர்கள், போக்குவரத்து ஊழியர்கள், பேரங்காடி மேலாளர்கள், பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள், சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பின்னணியில் இருந்து முக்கிய பங்காற்றிய அரசாங்க, தனியார் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்று இருந்தனர்.
அவர்களின் அர்ப்பணிப்பு
களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று, கைதட்டிப் பாராட்டினர்.
முன்களப் பணியாளர்களின் கடின உழைப்புக்கும் தியாகங்களுக்கும் கௌரவம் அளிக்கும் வகையில் கிட்டத்தட்ட அரை நிமிட நேரம் உறுப்பினர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
பின்னர் உரையாற்றிய துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், கொள்ளைநோயைச் சமாளிப்பதில் சிங்கப்பூரின் கொள்கைகளும் செயல்பாடுகளும் மற்ற நாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தது என்றார். அத்தியாவசியப் பொருள் விநியோகம் தடை
படாமலிருப்பதை உறுதி செய்ய துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் சிங்கப்பூர் திறந்து வைத்திருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

