ஹலிமா: சிங்கப்பூர், மலேசிய ஒத்துழைப்பைப் பலப்படுத்த வாய்ப்புகள் அதிகம்

ஹலிமா: சிங்கப்பூர், மலேசிய ஒத்துழைப்பைப் பலப்படுத்த வாய்ப்புகள் அதிகம்

2 mins read
ef9f1b17-5bd6-4b1e-b15f-3dc861326862
-

சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் தங்­க­ளின் ஒத்­து­ழைப்பை இரு­த­ரப்­புப் பல­னுக்­காக விரி­வு­படுத்­தும் வாய்ப்­பு­கள் அதி­கம் என்று மலே­சி­யா­வுக்கு அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்­துள்­ளார்.இரு நாடு­க­ளுக்­கும் இடையே தூத­ரக உற­வு­கள் உரு­வான இந்த 58 ஆண்­டு­களில் இரு­தரப்­புத் தொடர்­பு­கள் ஒவ்­வோர் அம்­ச­மாக வலுப்­பெற்று வந்­துள்­ள­தாக திரு­வாட்டி ஹலிமா குறிப்­பிட்­டார்.

அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பைச் சிறப்­பிக்­கும் வகை­யில் மலே­சிய மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா அகம்­மது ஷா, அவ­ரின் துணை­வி­யார் அஸிஸா அமினா மைமுனா இஸ்­கந்­த­ரியா ஆகிய இரு­வரும் நேற்று ஏற்­பாடு செய்­திருந்த விருந்து உப­ச­ரிப்பு நிகழ்ச்­சி­யில் திரு­வாட்டி ஹலிமா இத­னைக் கூறி­னார்.

"பொரு­ளி­யல், பாது­காப்பு, மக்­கள் என வெவ்­வேறு கூறு­களில் கணி­ச­மான, இரு­த­ரப்­புக்­கும் பலன்­த­ரக்­கூ­டிய ஒத்­து­ழைப்பை நம் இரு நாடு­களும் அனு­ப­விக்க முடி­கிறது," என்­றார் அவர். கடந்த அக்­டோ­பர் மாதம் சுல்­தான் அப்­துல்லா சிங்­கப்­பூ­ருக்கு வருகை புரிந்­தி­ருந்­ததை அடுத்து அதி­பர் ஹலிமா மலே­சி­யா­வுக்­குத் தமது அதி­கா­ர­பூர்வ வரு­கையை மேற்­கொண்­டுள்­ளார். இன்­றோடு இந்­தப் பய­ணம் முடி­வ­டை­கிறது.

கொவிட்-19 கொள்­ளை­நோயால் மூடப்­பட்­டி­ருந்த சிங்­கப்­பூர், மலே­சிய எல்­லை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டதை அடுத்து, ஏப்­ர­லில் ஓராண்டு ஆக­வுள்ள நிலை­யில், மாதந்­தோ­றும் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் மலே­சி­யா­வுக்கு நிலச் சோத­னைச்­சா­வ­டி­கள் மூலம் பய­ணிப்­பது உற்­சா­க­மூட்­டும் செய்தி என்­றார் அவர்.

ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் எம்­ஆர்டி ரயில் இணைப்பு 2026ஆம் ஆண்­டில் தயா­ரா­கும்­போது ஏற்­கெ­னவே அணுக்­க­மாக உள்ள சிங்­கப்­பூர், மலே­சி­யா­வுக்கு இடையே இணைப்பு மேலும் வலு­வ­டை­யும் என்­றார் திரு­வாட்டி ஹலிமா. கல்வி தொடர்­பில் இரு­த­ரப்பு பங்­கா­ளித்­து­வத் திட்­டங்­களின் வழி­யாக இரு­நாட்டு இளை­யர்­களும் ஒரு­வ­ரோடு ஒரு­வர் பழ­கிக்­கொள்­வதை நாடு­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்­றார் அதி­பர் ஹலிமா.

உலக நில­வ­ரம் மாற்­றங்­களும் சவால்­களும் நிறைந்­த­தாக இருக்க, ஆசி­யானை நிறு­விய உறுப்பு நாடு­க­ளான மலே­சி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் தொடர்ந்து வட்­டாரத்தை ஒன்­று­பட்­ட­தா­க­வும் நம்­பிக்­கை­யா­ன­தா­க­வும் வைத்­திருக்க உதவ வேண்­டும் என்று அவர் அறி­வு­றுத்­தி­னார்.

திரு­வாட்டி ஹலி­மா­வின் கருத்­து­களை ஆமோ­தித்த சுல்­தான் அப்­துல்லா, மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல், பசு­மைப் பொரு­ளியல், உண­வுப் பாது­காப்பு போன்ற புதிய அம்­சங்­கள் தொடர்­பில் ஒத்­து­ழைப்பு அதி­கரிக்­கக் கோரிக்கை விடுத்­தார்.