சென்ற மாதம் மூலாதாரப் பணவீக்க விகிதம் மாறவில்லை

சென்ற மாதம் மூலாதாரப் பணவீக்க விகிதம் மாறவில்லை

3 mins read

சிங்­கப்­பூ­ரில் சென்ற மாதம் மூலா­தா­ரப் பண­வீக்க விகி­தம் நிலை­யா­கவே இருந்­தது.

சேவைக் கட்­ட­ணங்­க­ளின் உயர்வு குறை­வா­கவே இருந்­த­போ­தும் மின்­கட்­ட­ணம், சில்­லறை விற்­பனை விலை ஆகி­யவை வெகு­வாக அதி­க­ரித்­தது இதற்­குக் கார­ணம்.

உல­க­ள­வில் வங்­கித் துறை­யில் பெரிய அள­வி­லான குழப்­பம் நில­வும் வேளை­யில், குறு­கிய காலத்­திற்­குப் பண­வீக்க விகித நிலைமை சற்றே மேம்­ப­டக்­கூ­டும் என்று வல்­லு­நர்­கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

ஆண்டு அடிப்­ப­டை­யில் 5.5 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருந்த அந்த விகி­தம் இவ்­வாண்டு ஜன­வ­ரி­யி­லும் 5.5 விழுக்­கா­டா­கவே பதி­வா­னது.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்­பர் மாதத்­திற்­குப் பிறகு இதுவே ஆக அதி­க­மான மூலா­தா­ரப் பண­வீக்க விகி­தம்.

முன்­ன­தாக, சென்ற மாதம் சிங்­கப்­பூ­ரின் மூலா­தா­ரப் பண­வீக்க விகி­தம் 5.8 விழுக்­கா­டாக இருக்­கும் என்று பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் முன்­னு­ரைத்­தி­ருந்­த­னர். புளூம்­பெர்க் நிறு­வ­னம் நடத்­திய கருத்­தாய்­வில் அவர்­கள் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

மூலா­தா­ரப் பய­னீட்­டா­ளர் விலை என்­பது தனி­யார்ப் போக்­கு­வ­ரத்து, தங்­கு­மி­டக் கட்­ட­ணங்­கள் ஆகி­ய­வற்­றைத் தவிர்த்து சிங்­கப்­பூர்க் குடும்­பங்­க­ளின் செல­வு­க­ளைத் துல்­லி­ய­மா­கக் காட்­டு­கிறது.

சென்ற ஆண்டு ஏறக்­கு­றைய எட்டு மாதங்­கள் தொடர்ந்து அதி­க­ரித்த மூலா­தா­ரப் பண­வீக்க விகி­தம், அக்­டோ­பர், நவம்­பர், டிசம்­பர் மாதங்­களில் நிலை­யாக இருந்­தது. பின்­னர் இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் இவ்­வி­கி­தம் அதி­க­ரித்­தது. ஜன­வரி 2023ல் பொருள். சேவை வரி உயர்வு நடப்­புக்கு வந்­த­தும் இதற்­குக் கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

ஒட்­டு­மொத்­தப் பண­வீக்க விகி­தம் சென்ற மாதம் குறைந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் 6.6 விழுக்­கா­டா­கப் பதி­வான அது, சென்ற மாதம் 6.3 விழுக்­காடு ஆனது. முன்­னு­ரைக்­கப்­பட்ட 6.4 விழுக்­காட்டை விட அது குறைவு.

தனி­யார் போக்­கு­வ­ரத்­துப் பிரி­வில் பண­வீக்க விகி­தம் குறைந்­ததே இதற்கு முக்­கி­யக் கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் நேற்று இந்த விவ­ரங்­களை வெளி­யிட்­டன.

இந்த ஆண்டு முழு­வ­தற்­கு­மான ஒட்­டு­மொத்த பண­வீக்க விகி­தம் 5.5 விழுக்­காடு முதல் 6.5 விழுக்­காடு வரை இருக்­கும் என்று அதி­கா­ர­பூர்­வ­மாக முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது. மூலா­தா­ரப் பண­வீக்க விகி­தம் 3.5 முதல் 4.5 விழுக்­காடு வரை இருக்­கக்­கூடும்.

இந்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி முதல் பொருள், சேவை வரி ஏழு விழுக்­காட்­டில் இருந்து எட்டு விழுக்­கா­டாக உயர்த்­தப்­பட்­ட­தைக் கருத்­தில்­கொண்டு இந்த முன்­னு­ரைப்­பு­கள் வெளி­யி­டப்­பட்­டன.

எதிர்­வ­ரும் காலாண்­டு­களில் பண­வீக்க விகி­தம் விரை­வா­கக் குறை­யக்­கூ­டும் என்­கின்­ற­னர் சில வல்­லு­நர்­கள். கடன் வழங்­கு­வ­தற்­கான நிபந்­த­னை­கள் கடு­மை­யாக்­கப்­ப­டு­தல், குறு­கிய கால வட்டி விகித உயர்வு ஆகி­ய­வற்­றால் முத­லீ­டு­களும் பய­னீட்­டா­ளர்­கள் செலவு செய்­வ­தும் பாதிக்­கப்­படும் என்­பதை அவர்­கள் சுட்­டி­னர்.

அடுத்த மாதக் கூட்­டத்­தில் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நாண­யக் கொள்­கையை மீண்­டும் கடு­மை­யாக்­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும் சில வல்­லு­நர்­கள், விமா­னப் பய­ணக் கட்­ட­ணங்­கள் வெகு­வா­கக் குறைந்த நிலை­யி­லும் சென்ற மாத மூலா­தா­ரப் பண­வீக்க விகி­தம் நிலை­யாக இருந்­தது வியப்பு அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இவ்­வி­கி­தம் ஆணை­யத்­தின் முன்­னு­ரைப்­பை­வி­டக் குறை­வாக இருப்­ப­தால் இந்த ஆண்டு அந்­நி­யச் செலா­வ­ணிக் கொள்கை மேலும் கடு­மை­யாக்­கப்­ப­டாது என்­பது அவர்­கள் கருத்து.

ஜன­வரி மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், சென்ற மாதம் மின்­சா­ரம், எரி­வாயு ஆகி­ய­வற்­றுக்­கான கட்­ட­ணங்­கள் 0.6 விழுக்­காடு அதி­க­ரித்­தன. சில்­லறை விற்­ப­னைத் துறை­யில் பண­வீக்க விகி­தம் 0.5 விழுக்­காடு உயர்ந்­தது.

தனி­யார்ப் போக்­கு­வ­ரத்­துப் பிரி­வில் பண­வீக்க விகி­தம் சென்ற மாதம் 2.3 விழுக்­காடு குறைந்­தது. கார்­க­ளின் விலை உயர்ந்­த­தும் பெட்­ரோல் விலை குறைந்­த­தும் இதற்­குக் கார­ணங்­கள்.

சேவைத் துறை­யில் பண­வீக்க விகி­தம் சற்றே உயர்ந்­த­தா­க­வும் உண­வுத் துறை­யில் மாற்­ற­மில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.