சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

பிலிப்­பீன்­சின் சிபு நக­ரில் இருந்து சிங்­கப்­பூர் வந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்­தின் இயந்­தி­ரத்­தில் கோளாறு ஏற்­பட்ட சந்­தே­கத்­தின்பேரில், நேற்று முன்­தி­னம் இரவு அது மலே­சி­யா­வில் அவ­ச­ர­மா­கத் தரை­யி­றங்க நேரிட்­டது.

சிபு பசி­பிக் ஏர் விமான நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மான 5ஜே547 விமா­னம், இரவு 10.20 மணி­ய­ள­வில் கோத்தா கின­பாலு அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கி­யது.

நேற்று முன்தினம் இரவு 7.55 மணி­ய­ள­வில் சிபு­வில் இருந்து புறப்­பட்ட விமா­னம் நள்­ளி­ரவுவாக்­கில் சிங்­கப்­பூர் வந்­த­டை­யத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

அதில் பய­ணி­களும் விமா­னச் சிப்­பந்­தி­க­ளு­மாக மொத்­தம் 92 பேர் பய­ணம் செய்­த­னர்.

விமா­னத்­தில் அப்­போது ஏற்­பட்ட குழப்­பத்­தைப் பதிவு செய்த பய­ணி­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி செலோன் டாமயோ, ‘ஒரு­வேளை ஏதே­னும் நேர்ந்­தால்’ என்ற தலைப்­பில் இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்­டி­ருந்­தார்.

“எனக்கு மிக­வும் பய­மாக இருந்­தது. விமா­னச் சிப்­பந்­தி­களும் பய­ணி­களும் அழு­து­கொண்­டி­ருந்­த­னர்,” என்று அவர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

விமான நிலை­யத்­தில் சாபா மாநி­லத் தீய­ணைப்பு, மீட்­புத் துறை­யி­னர் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்டு இருந்­த­னர்.

ஆனால் விமா­னம் பாது­காப்­பா­கத் தரை­யி­றங்­கி­யது.

பய­ணி­க­ளுக்கு ஏற்­பட்ட சிர­மத்­திற்கு விமான நிறு­வ­னம் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­டது.

மாற்று விமா­னம் மூலம் அவர்­களை சிங்­கப்­பூ­ருக்­குக் கொண்டு­வர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­க­வும் அது தெரி­வித்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!