சர்ச்சைக்குரிய செல்வந்தர் கௌதம் அதானியுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் தொடர்பு குறித்து தாம் கேள்வி எழுப்பியதால் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாக காங்கிரஸ்
கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடியின் பெயர் குறித்து அவதூறு ஏற்படும் வகையில் கருத்துரைத்
திருந்ததாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அண்மையில் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி இழந்துள்ளார். இதற்கு பாஜகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று அவர் அடித்துக்கூறு
கிறார்.
"நான் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். அதானி குறித்து நான் பேசியதைக் கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டார்.
"ஆனால் நான் பின்வாங்கப்போவதில்லை. தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையிலான உறவு என்ன?" என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்து
களுக்கு அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் தாம் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று ராகுல் காந்தி நேற்று தெரிவித்தார்.
"நான் இந்துத்வா சித்தாந்தவாதி வி.டி. சவார்க்கர் அல்ல. நான் காந்தி. காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்பதில்லை. பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில் இருந்தபோது சவார்க்கர் அவர்
களுக்கு உதவினார். உயிருக்குப் பயந்து தமக்குக் கருணை காட்டும்படி பிரிட்டிஷ்காரர்களுக்கு அவர் கடிதம் எழுதினார். அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றார் ராகுல் காந்தி. பாஜகவின் ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிட்டதாகவும் கருத்துச் சுதந்திரம் அறவே இல்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, நேற்று செய்தியாளர் கூட்டத்தில் சவார்க்கரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்ததை எதிர்த்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
ராகுல் காந்தி பொய் கூறும் பழக்கம் உடையவர் என்றும் பதவி நீக்கத்துக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்யாமல் எதிர்வரும் தேர்தலில் இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்
படுத்த திட்டமிட்டுள்ளார் என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

