'ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும், பணிகளை அல்ல'

'ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும், பணிகளை அல்ல'

2 mins read

வேலை வாய்ப்பு மீள்­தி­றனை வலுப்­ப­டுத்த சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது. ஆனால் இந்த இலக்கை எட்ட சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளைப் பாது­காக்க வேண்­டும், வேலை­களை அல்ல என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

வேலை­க­ளைப் பாது­காக்­கும் அணு­கு­மு­றையை சிங்­கப்­பூர் கடைப்­பி­டிக்­க­வில்லை என்­றார் அவர். அவ்­வாறு செய்­தால் புதிய, மேலும் சிறந்த வேலை­கள் உரு­வாக முடி­யா­மல் போகக்­கூ­டும் என்று திரு வோங் கூறி­னார்.

வேலை வாய்ப்பு மீள்­தி­றன் தொடர்­பான குடி­யி­ருப்­பா­ளர்­கள் கலந்­து­ரை­யா­டல் நிகழ்­வின் நிறைவு விழா­வில் திரு வோங் நேற்று கலந்­து­கொண்டு பேசி­னார்.

இந்த நிகழ்வு ஜூரோங் ஈஸ்ட் வட்­டா­ரத்­தில் உள்ள வேலை வாய்ப்பு, வேலைத் திறன் பயிற்­சிக் கழ­கத்­தின் வாழ்க்­கைத் தொழில் சேவை­கள் மையத்­தில் நடை­பெற்­றது.

நான்கு அமர்­வு­களில் நடத்­தப்­பட்ட இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லுக்குக் கொள்கை ஆய்­வுக் கழ­கம் ஏற்பாடு செய்தது. இதற்கு நீ ஆன் கொங்சி நிதி வழங்­கி­யது. ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு நடத்­தும் திட்­டங்­கள் வலுப்­ப­டுத்­தப்­படும் என்­றார் திரு வோங்.

சிங்­கப்­பூர் போன்ற துடிப்­பு­மிக்க பொரு­ளி­ய­லைக் கொண்ட நாடு­களில் சில வேலை­கள் வழக்­கற்­றுப் போகக்­கூ­டும். எனவே, ஊழி­யர்­க­ளைப் பாது­காக்க அவர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­ப­தி­லும் தகுந்த வேலை­க­ளு­டன் அவர்­களை இணைப்­ப­தி­லும் கவ­னம் செலுத்­தப்­படும் என்று துணைப் பிர­த­மர் வோங் கூறி­னார்.

"ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரும் புதிய வேலைக்கு எளி­தில் மாற, அவர்­கள் புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்­ள­வும் திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் உத­வும் அணு­கு­முறை கையா­ளப்­படும்," என்று திரு வோங் உறுதி அளித்­தார்.

இதற்கு வேலை­களை உரு­வாக்­கும் முத­லா­ளி­க­ளின் பங்கு அவ­சி­யம் என்­றும் அவர்­களை இதில் ஈடு­ப­டச் செய்ய வேண்­டும் என்­றும் திரு வோங் வலி­யு­றுத்­தி­னார்.

திறன் இடை­வெ­ளி­யைக் குறைக்க முத­லா­ளி­க­ளு­ட­னும் அந்­தந்த தொழில்­து­றை­க­ளு­ட­னும் திறன் மேம்­பாட்­டுப் பயிற்சி அளிப்­ப­வர்­கள் இணைந்து செயல்­பட வேண்­டும் என்­றார் அவர்.

பயிற்­சி­களில் ஈடு­பட்டு அவற்றை நிறைவு செய்­யும் ஊழி­யர்­கள், தேவை அதி­கம் உள்ள திறன்­களைக் கற்­றுக்­கொள்­வதை உறுதி செய்ய வேண்­டும் என்று திரு வோங் கூறி­னார்.

தொழிற்­சங்­கங்­கள் மூல­மா­க­வும் நேர­டி­யா­க­வும் திறன் மேம்­பாட்­டுப் பயிற்­சி­களில் ஊழி­யர்­களை ஈடு­ப­டச் செய்­வது மிக­வும் முக்­கி­யம் என்­றார் திரு வோங்.