அனைத்து வீவக வட்டாரங்களும் வசிப்பதற்குச் சிறந்தவை

அனைத்து வீவக வட்டாரங்களும் வசிப்பதற்குச் சிறந்தவை

2 mins read
509eab17-0095-45f1-bca7-8fcf888d6260
-

சிங்­கப்­பூ­ரின் எந்­தப் பகு­தி­யிலும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீட்­டில் வசிப்­போர்க்கு அவர்­க­ளின் குடி­யி­ருப்­புப் பேட்டை சரி­யா­கத் திட்­ட­மி­டப்­பட்­டது என்ற உத்­த­ர­வா­தத்­தைத் தர இய­லும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யி­ருக்­கி­றார்.

அந்­தப் பேட்­டை­கள் முறை­யாக நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன, அவற்­றில் தற்­கா­லத் தேவை­களுக்கு ஏற்ற வச­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன என்று உறு­தி­யா­கக் கூற­மு­டி­யும் என்­றார் அவர். நேற்று சொங் பாங் சிட்டி எனும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட ஏழு மாடிக் கட்­ட­டத்­துக்­கான நில அகழ்வு நிகழ்ச்­சி­யில் அவர் உரை­யாற்­றி­னார்.

"சிங்­கப்­பூ­ரின் சில குடி­யிருப்பு வட்­டா­ரங்­கள் மற்­ற­வற்­றை­வி­டப் புகழ்­பெற்­ற­வை­யாக இருப்­பது தவிர்க்க முடி­யா­தது. ஆனால் ஒவ்­வொரு வீவக பேட்­டை­யி­லும் பள்­ளி­கள், மருந்­த­கங்­கள், உண­வ­கங்­கள், விளை­யாட்டு வச­தி­கள், தர­மான போக்­கு­வ­ரத்­துத் தொடர்பு போன்ற வச­தி­கள் அமைந்­தி­ருப்­பதை அர­சாங்­கம் உறு­தி­செய்­கிறது," என்று பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

"மக்­கள் செயல் கட்சி அர­சாங்­கம் அனைத்து சிங்­கப்­பூரர்­க­ளுக்­கும் தரும் உறு­தி­மொழி இது," என்று கூறிய அவர், "உங்­கள் வீவக அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்பு வீடு உங்­களுக்­கும் உங்­கள் குடும்­பத்­திற்­கும் வசிப்­ப­தற்கு உரிய நல்ல இடம் என்­ப­தோடு, ஓய்­வுக்­காலத்­திற்­குத் தேவைப்­படும் மதிப்­பு­மிகு சொத்­தா­க­வும் விளங்­கும்," என்று கூறி­னார்.

"சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நாட்­டின் பொது வீட­மைப்­புத் திட்­டம் குறித்து நன்­றா­கத் தெரி­யும். மக்­கள் ஆத­ர­வோடு அர­சாங்­கம் தொடர்ந்து இத்­திட்­டத்தை நல்ல முறை­யில் கடைப்­பி­டிக்­கும். வருங்­கா­லத்­தி­லும் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­யைத் தொடர்ந்து நிறை­வேற்­று­வ­தில் அர­சாங்­கம் முனைப்­பாக உள்­ளது," என்று திரு லீ தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

ஈசூ­னில் கட்­டப்­படும் சொங் பாங் சிட்டி கட்­ட­டம் 2027ஆம் ஆண்டு கட்டி முடிக்­கப்­படும். நாற்­பது ஆண்­டுப் பழை­மை­யான அந்த அக்­கம்­பக்­கப் பேட்­டைக்­குப் புத்­து­யி­ரூட்­டும் வகை­யில் அதில் நீச்­சல் குளங்­கள், மெது­வோட்­டத் தடங்­கள், உட­லு­று­திக் கூடங்­கள், உடற்­ப­யிற்­சிக் கூடம், கடை­கள், பேரங்­காடி போன்ற வச­தி­கள் அமைந்­தி­ருக்­கும்.

புதுப்­பிக்­கப்­பட்ட சொங் பாங் சமூக மன்­றம், அதன் மேம்­ப­டுத்­தப்­பட்ட உண­வங்­காடி நிலை­யம், தற்­போ­தைய சொங் பாங் சந்தை, உணவு நிலை­யம் ஆகி­ய­வை­யும் அதில் இடம்­பெற்­றி­ருக்­கும்.

அர­சாங்­கம் சிங்­கப்­பூர் முழு­வதிலும் வீடு­களை மட்­டும் கட்­டா­மல், பழைய பேட்­டை­க­ளைப் புதுப்­பிப்­ப­தி­லும் கவ­னம் செலுத்து­கிறது என்­ப­தற்கு சொங் பாங் சிட்டி நல்ல எடுத்­துக்­காட்டு என்­றார் பிர­த­மர் லீ.

"பழை­யன, புதி­யன என்ற பாகு­பா­டின்றி நாட்­டின் வீவக பேட்­டை­கள் அனைத்­தும் உயர் தரத்­தில் அமைந்­தி­ருப்­பதே அர­சாங்­கத்­தின் விருப்­பம்," என்­றார் அவர்.

நில அகழ்வு நிகழ்ச்­சி­யில் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­க­மும் கலந்­து­கொண்­டார்.