இந்திய வம்சாவளிச் சிறுமியைக் கொன்றவனுக்கு 100 ஆண்டுச் சிறை

இந்திய வம்சாவளிச் சிறுமியைக் கொன்றவனுக்கு 100 ஆண்டுச் சிறை

2 mins read
326278ae-8c11-4229-b365-e94b6a7527ad
அமெ­ரிக்­கா­வின் லுவி­சி­யானா மாநி­லத்­தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஐந்து வயது இந்­திய வம்­சா­வ­ளிச் சிறு­மி­யைக் கொன்ற ஆட­வ­ருக்கு 100 ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கச் செய்­தி­கள் தெரி­வித்­துள்­ளன. படம்: பிக்ஸாபே -

அமெ­ரிக்­கா­வின் லுவி­சி­யானா மாநி­லத்­தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஐந்து வயது இந்­திய வம்­சா­வ­ளிச் சிறு­மி­யைக் கொன்ற ஆட­வ­ருக்கு 100 ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கச் செய்­தி­கள் தெரி­வித்­துள்­ளன.

மியா பட்­டேல் என்ற அச்­சிறுமி கொல்­லப்­பட்ட வழக்­கில் ஷ்ரீவ்­போர்ட் நக­ரைச் சேர்ந்த ஜோசஃப் லீ ஸ்மித், 35, என்ற அந்த ஆட­வர் குற்­ற­வாளி என்று கடந்த ஜன­வரி மாதம் அறி­விக்­கப்­பட்­டது.

ஹோட்­டல் அறை­யில் மியா விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­போது அவ­ளது தலை­யில் குண்டு ­பாய்ந்­தது.

உட­ன­டி­யாக அவள் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டாள். ஆனா­லும், மூன்று நாள்­க­ளுக்­குப் பிறகு, அதா­வது 2021 மார்ச் 23ஆம் தேதி அவ­ளது உயிர் பிரிந்­தது.

'சூப்­பர் 8 மோட்­டல்' என்ற அந்த ஹோட்­டல் அச்­ச­ம­யத்­தில் விமல் - சிநேகா பட்­டேல் இணை­ய­ருக்­குச் சொந்­த­மா­ன­தாக இருந்­தது.

மியா உட்­பட தங்­க­ளது இரு குழந்­தை­க­ளு­டன் அவர்­கள் அந்த ஹோட்­ட­லின் தரைத்­த­ளத்­தில் குடி­யி­ருந்­த­னர்.

சம்­பவ நாளன்று அந்த ஹோட்­ட­லின் வாகன நிறுத்­தப் பகு­தி­யில் ஸ்மித், இன்­னொ­ரு­வரு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­தாக நீதி­மன்ற விசா­ர­ணை­யின்­போது தெரி­விக்­கப்­பட்­டது.

ஆத்­தி­ரத்­தில் அவன் தனது கைத்­துப்­பாக்­கியை எடுத்து எதி­ரா­ளியை நோக்­கிச் சுட, குறி­தவறி குண்டு மியா­வின் தலை­யில் பாய்ந்­தது.

பின்­னர் அக்­குண்டு மியா­வின் தாய் சிநே­கா­வை­யும் உர­சிச் சென்­றது.

இந்­நி­லை­யில், மியா இறந்து சரி­யாக ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு, அதா­வது 2023 மார்ச் 23ஆம் தேதி ஸ்மித்­துக்கு நூறாண்­டுச் சிறைத்­தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

அத்துடன், அவ­னுக்­குத் தற்­கா­லிக விடு­ப்போ நன்­னடத்­தை­யின் அடிப்­ப­டை­யில் தண்­ட­னைக்­கா­லக் குறைப்போ வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்­றும் நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.