நாடாளுமன்றத்தில் அமளி, காகித வீச்சு, கடும் கூச்சல்

நாடாளுமன்றத்தில் அமளி, காகித வீச்சு, கடும் கூச்சல்

3 mins read
29dac3e9-cd6d-4cfb-83f6-a945e7eeb5d8
-

ராகுல் காந்தி கடந்த வாரம் வெள்­ளிக்­

கி­ழமை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து தகுதி நீக்­கம் செய்­யப்­பட்­டார். அந்த நட­வ­டிக்­கைக்­குப் பின்பு நேற்று முதல்­மு­றை­யாக நாடா­ளு­மன்­றம் கூடி­யது. கூட்­டம் தொடங்­கி­ய­துமே, ராகுல் தகு­தி­நீக்­கத்­தைக் கண்­டித்தும் அதானி விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வலியுறுத்தியும் இரு அவை­க­ளி­லும் எதிர்க்­கட்­சி­யி­னர் அம­ளி­யில் ஈடு­பட்­ட­னர்.

சபா­நா­ய­கர் ஓம் பிர்­லாவை நோக்கி காகி­தங்­களைக் கிழித்து வீசி கடுமையாகக் கூச்­சல் போட்­ட­னர். அத­னால், கூட்டம் தொடங்­கிய ஒரு­சில நிமி­டங்­க­ளி­லேயே இரு அவை­களும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டன. மக்­க­ளவை மாலை 4 மணி வரை­யும் மாநி­லங்­க­ளவை பிற்­ப­கல் 2 மணி வரை­யும் ஒத்தி வைக்­கப்­பட்­டன.

அத­னால், மன்ற வளா­கத்­தில் திரண்ட எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் மகாத்மா காந்தி சிலை அருகே ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அவர்­களில் பெரும்­பா­லா­னோர், ராகுல் தகு­தி­நீக்­கத்­தைக் கண்­டிக்­கும் வகை­யில் கறுப்பு உடை அணிந்­தி­ருந்­த­னர்.

இந்­தப் போராட்­டத்­தில் ராகு­லின் தாயார் சோனியா காந்­தி­யும் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேசிய தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்­கே­வும் கலந்­து­கொண்­ட­னர்.

காங்­கி­ரஸ், திமுக, கம்­யூ­னிஸ்ட் போன்­றவை உள்­ளிட்ட 14 எதிர்க்­கட்­சி­கள் இந்­தப் போராட்­டத்­தில் பங்­கேற்­ற­தாக செய்தி நிறு­வ­னங்­கள் குறிப்­பிட்­டன.

முன்­ன­தாக, காலை 10.30 மணி­ய­ள­வில் நாடா­ளு­மன்ற காங்­கி­ரஸ் கட்சி அலு­வ­ல­கத்­தில் எதிர்க்­கட்­சி­க­ளின் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது.

மத்­திய அர­சுக்கு தங்­க­ளது எதிர்ப்பை எவ்­வாறு காட்­டு­வது என்­பது தொடர்­பான ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் 14 கட்­சி­க­ளைச் சேர்ந்த உறுப்­பி­னர்­கள் கலந்­து­கொண்­ட­னர். திமுக சார்­பில் அக்­கட்­சி­யின் மக்­க­ள­வைக் குழுத் தலை­வர் டிஆர் பாலு, திருச்சி சிவா, தயா­நிதி மாறன் ஆகி­யோ­ரும் மதி­முக சார்­பாக வைகோ­வும் பங்­கேற்­ற­னர்.

எதிர்க்­கட்­சி­யி­னர் நடத்­தும் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் முதல்­மு­றை­யாக திரி­ணா­மூல் காங்­கி­ர­சின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­ட­னர். அக்கட்சி சார்பில் பிரசுன் பானர்ஜியும் ஜவஹர் சிர்காரும் கறுப்பு உடை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமி­ழக சட்­ட­மன்­றத்­திற்கு காங்­கி­ரஸ் எம்­எல்­ஏக்­கள் கறுப்பு உடை அணிந்து வருகை தந்­த­னர். அப்­போது ராகு­லுக்கு ஆத­ர­வாக இருப்­போம் என்ற வாச­கத்­து­டன் கூடிய பதாகை­களை ஏந்­தி­ய­து­டன் பாஜ­க­வுக்கு எதி­ரான முழக்­கங்­க­ளை­யும் அவர்­கள் எழுப்­பி­னர்.

ராகுல் காந்தி தகுதி நீக்­கம் தொடர்­பாக புதுச்­சேரி சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று வாக்கு­ வா­தம் ஏற்­பட்­டது. தொடர்ந்து திமுக, காங்­கி­ரஸ் எம்­எல்­ஏக்­கள் வெளி­ந­டப்பு செய்­த­னர். விவா­தம் முழு­வ­தும் பேர­வைக் குறிப்­பி­லி­ருந்து நீக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக, நேற்று முன்­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழமை நாடு முழு­வ­தும் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் அறப்­போ­ராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். தமிழ்­நாட்­டில் 70க்கும் மேற்­பட்ட இடங்­களில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் கறுப்பு உடை அணிந்­தும் வாயில் கறுப்­புத் துணி கட்­டி­யும் கண்­களை கறுப்­புத் துணி­யால் மறைத்­தும் காங்­கி­ர­சார் பங்­கேற்­ற­னர்.

சென்­னை­யில் 7 இடங்­களில் ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது. வள்­ளு­வர் கோட்­டத்­தில் நடை­பெற்ற போராட்­டத்­தில் காங்­கி­ரஸ் எம்.பி.க்கள் திரு­நா­வுக்­க­ர­ச­ரும் கார்த்தி சிதம்­ப­ர­மும் கலந்­து­கொண்­ட­னர்.

தலை­ந­கர் டெல்­லி­யில் காந்தி நினை­வி­ட­மான ராஜ்­காட்­டில் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் போராட்­டம் நடத்த காவல்­துறை அனு­மதி மறுத்­தது. அத­னால், காந்தி நினை­வி­டத்­துக்கு வெளியே நடை­பெற்ற அறப்­போ­ராட்­டத்­தில் ராகு­லின் சகோ­த­ரியான பிரி­யங்கா காந்தியும் கலந்­து­கொண்­டார்.

ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒன்றுதிரண்ட 14 கட்சிகள்; போராட்டத்தில் அம்மா, சகோதரி