நேட்டோ: அணுவாயுத அறிவிப்பு ரஷ்யாவின் பொறுப்பற்ற செயல்

நேட்டோ: அணுவாயுத அறிவிப்பு ரஷ்யாவின் பொறுப்பற்ற செயல்

2 mins read
08a7228f-a823-42f5-a7ab-b9c5fc10a3bc
பெல­ருஸில் அணு ஆயு­தங்­க­ளைக் குவிக்­கப்­போ­வ­தாக ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் அறி­வித்­தி­ருப்­பதை நேட்டோ அமைப்பு 'ஆபத்­தான, பொறுப்­பற்ற' செயல் என குறை­கூ­றி­யுள்­ளது. படம்: ஏஎஃப்பி -

பெல­ருஸில் அணு ஆயு­தங்­க­ளைக் குவிக்­கப்­போ­வ­தாக ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் அறி­வித்­தி­ருப்­பதை நேட்டோ அமைப்பு 'ஆபத்­தான, பொறுப்­பற்ற' செயல் என குறை­கூ­றி­யுள்­ளது.

ஜெர்­மனி, பெல்­ஜி­யம், நெதர்­லாந்து போன்ற ஐரோப்­பிய நாடு­களில் அமெ­ரிக்கா தனது ஆயு­தங்­க­ளைக் குவித்­தி­ருப்­ப­து­போல ரஷ்­யா­வும் ரஷ்ய-உக்­ரேன் எல்­லை­யி­லுள்ள பெல­ருஸில் 'போர்த் தந்­திர அணு­வா­யு­தங்­களை' நிலை­நி­றுத்­தத் திட்­ட­மி­டு­வ­தாக சனிக்­கி­ழமை திரு புட்­டின் தெரி­வித்­தி­ருந்­தார்.

இருப்­பி­னும், அணு ஆயு­தப் பர­வல் தடைக்­கான உடன்­பாடு தொடர்­பாக தான் ஏற்­கெ­னவே அளித்த வாக்­கு­றுதி எத­னை­யும் ரஷ்யா மீறாது என்­றும் அவர் கூறி­னார்.

அமெ­ரிக்கா கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக தனது நட்பு நாடு­களில் அணு ஆயு­தங் களை நிலை­நி­றுத்தி வந்­துள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

உக்­ரேன் மீது 13 மாதங்­க­ளுக்கு முன்­னர் படை­யெ­டுக்­கத் தொடங்­கிய ரஷ்யா, அணு ஆயு­தம் தொடர்­பாக இதற்கு முன்­ன­ரும் பேசி­யி­ருந்­தா­லும் பெல­ருஸில் ஆயு­தங்­க­ளைக் குவிப்­ப­தாக அறி­வித்­தி­ருப்­பது எதிர்­பா­ராத ஒன்று.

அவ­ரது இந்த அறி­விப்பு உக்­ரே­னுக்­கும் அதனை ஆத­ரிக்­கும் நேட்டோ படை­கள் மற்­றும் ஐரோப்­பா­வுக்கும் திரு புட்­டின் மறை­முக எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த அறி­விப்பு வெளி­யா­ன­தும் ஐநா பாது­காப்பு மன்­றத்­தின் அவ­ச­ரக் கூட்­டத்தை நடத்த உக்­ரே­னின் வெளி­யு­றவு அமைச்சு வேண்­டு­கோள் விடுத்­தது. ரஷ்­யா­வின் அணு­வா­யு­தப் பயன்­பாட்­டைத் தடுத்து நிறுத்த அனைத்­து­லக சமூ­கம் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்­றும் அது கூறி­யது.

ஐரோப்­பிய ஒன்­றி­ய­மும் ரஷ்­யா­வுக்கு உட­ன­டி­யாக தனது கண்­ட­னத்தை ஒரு­மித்த குர­லில் தெரி­வித்­தது.

இருப்­பி­னும், அவ­ரது இந்த அறி­விப்­புக்கு உட­ன­டி­யாக, எச்­ச­ரிக்­கை­யு­டன் கருத்­துத் தெரி­வித்த அமெ­ரிக்கா, அணு ஆயு­தங்­களை ரஷ்யா பயன்­ப­டுத்­து­வது தொடர்­பான அறி­கு­றி­கள் தென்­ப­ட­வில்லை என்­றது.

இந்­நி­லை­யில், நேட்டோ அமைப்­பின் பேச்­சா­ளர் திரு­வாட்டி ஓவானா லுங்­கெஸ்கு ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­திற்கு மின்­னஞ்­சல் ஒன்றை அனுப்­பி­னார்.

அதில் அவர், "ரஷ்­யா­வின் அறி­விப்பு பொறுப்­பற்­றது; ஆபத்­தா­ன­தும்­கூட. ரஷ்யா தனது அணு­சக்தி நிலைப்­பாட்­டில் தன்­னைத்­தானே சரி­செய்­வ­தற்­கான எந்­த­வொரு மாற்­றத்­தை­யும் மேற்­கத்­திய நாடு­கள் இது­வரை காண­வில்லை. ரஷ்யா ஆயு­தக் கட்­டுப்­பாடு தொடர்­பான தனது கடப்­பா­டு­களை தொடர்ந்து மீறி வரு­கிறது," என்று குறிப்­பிட்­டார்.