எதிரிகள்மீது அடக்குமுறை தொடரும் என மியன்மார் ராணுவ ஆட்சிமன்றத் தலைவர் அறிவிப்பு

எதிரிகள்மீது அடக்குமுறை தொடரும் என மியன்மார் ராணுவ ஆட்சிமன்றத் தலைவர் அறிவிப்பு

1 mins read

தன்னை எதிர்ப்­ப­வர்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­முறை தொட­ரும் என்று மியன்­மார் ராணுவ ஆட்சி மன்­றத் தலை­வர் ஜென­ரல் மின் ஆங் ஹிலெய்ங் கூறி­யுள்­ளார்.

அதே­வே­ளை­யில் தேர்­தல் நடக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். தேர்­தலை நடத்­தப் போது­மான பகு­தி­கள் தங்­கள்­வ­சம் இல்லை என்று மியன்­மார் ராணு­வம் சில வாரங்­க­ளுக்கு முன்­பு­தான் கூறி­யி­ருந்­தது.

திரு­வாட்டி ஆங் சான் சூச்­சி­யின் தலை­மை­யில் செயல்­பட்ட ஜன­நா­யக முறைப்­படி தேர்வு செய்­யப்­பட்ட அர­சாங்­கத்தை 2021ல் அந்­நாட்டு ராணு­வம் கவிழ்த்­தது. அதி­லி­ருந்தே மியன்­மா­ரில் நிலை­யற்ற சூழல் இருந்து வரு­கிறது.

திரு­வாட்டி சூச்சி தேர்­தல் மோச­டி­யில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­பட்­ட­தைத் தொடர்ந்து அவ­ரின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டது.

எனி­னும், அவர் அச்­செ­ய­லில் ஈடு­பட்­ட­தற்­குப் போது­மான ஆதாரம் இல்லை.

திரு­ வாட்டி சூச்­சி­யின் ஆட்சி கவிழ்ந்­த­தைத் தொடர்ந்து மியன்­மா­ரில் மீண்­டும் ராணு­வத்­துக்­கும் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கும் இடையே மோதல் வெடித்­தது.

இந்­நி­லை­யில், வரு­டாந்­திர ஆயு­தப்படை தினமான நேற்று 8,000 படைவீரர்­கள் முன்­னி­லை­யில் உரை­யாற்­றிய ஆட்­சி­மன்­றத் தலை­வர், எதிர்த்­த­ரப்­பி­ன­ருக்­கும் அவர்­களை ஆத­ரிக்­கும் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கும் எதி­ராக 'கடு­மை­யான நட­வ­டிக்கை' எடுக்­கப்­படும் என்­றார்.