கட்டாய மரண தண்டனையை அகற்றும் மசோதா மலேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல்

கட்டாய மரண தண்டனையை அகற்றும் மசோதா மலேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல்

2 mins read

மலே­சி­யா­வில் கட்­டாய மரண தண்­ட­னையை அகற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் அந்­நாட்டு நாடா­ளு­மன்­றத்­தில் தொடங்­கி­யுள்­ளன. இதன் தொடர்­பில் நேற்று இரண்டு மசோ­தாக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன.

கட்­டாய மரண தண்­டனை நீக்க மசோதா 2023, மரண தண்­டனை, ஆயுள் தண்­டனை இரண்­டுக்­கு­மான திருத்த மசோதா 2023 ஆகி­யவை அவை.

மலே­சி­யப் பிர­த­மர் அலு­வ­ல­கத்­தில் சட்­டம், நீதித்­துறை மறு­சீ­ர­மைப்பு ஆகிய துறை­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் அஸ­லினா ஒத்­மான் சையது, இரு மசோ­தாக்­க­ளை­யும் தாக்­கல் செய்­தார்.

நடப்பு நாடா­ளு­மன்­றக் கூட்­டத் தொட­ரில் இந்த மசோ­தாக்­கள் குறித்து விவா­திக்­கப்­படும். கூட்­டத் தொட­ரின் இறுதி நாளான அடுத்த மாதம் 4ஆம் தேதிக்­குள் அவற்­றுக்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தனி­ம­னித உயி­ரின் புனி­தத்தை மதிக்­கும் அதே­வே­ளை­யில் அனை­வ­ருக்­கும் நீதி, நியா­யம் ஆகி­ய­வற்றை உறு­தி­செய்­வதே கட்­டாய மரண தண்­ட­னையை அகற்­று­வ­தன் நோக்­கம் என்­றார் அமைச்­சர்.

கொலை செய்­யப்­பட்­டோர், போதைப்­பொ­ருள் கடத்­தல் வழக்­கு­களில் சிக்­கிக்­கொண்­டோர், இத்­த­கை­யோ­ரின் குடும்­பத்­தி­னர் ஆகி­யோரை அவர் சுட்­டி­னார். இரு மசோ­தாக்­களும் சட்ட வடி­வம் பெறும்­போது அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கும் நீதி கிடைப்­பது உறுதி செய்­யப்­படும் என்­றார் அவர்.

பரிந்­து­ரைக்­கப்­படும் புதிய சட்­டங்­க­ளின்­கீழ், மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கும் ஏறக்­கு­றைய 1,300 பேர் தூக்­கு­மே­டை­யைத் தவிர்க்­கும் வாய்ப்­பைப் பெறக்­கூ­டும்.

கட்­டாய மரண தண்­டனை அகற்­றப்­பட்­டால், 90 நாள்­க­ளுக்­குள் இவர்­கள் தங்­கள் தண்­ட­னையை மறு­ஆய்வு செய்­யும்­படி மலே­சிய கூட்டரசு நீதி­மன்­றத்­தி­டம் விண்­ணப்­பிக்­க­லாம்.

இவர்­கள் ஒரு­முறை மட்­டுமே இவ்­வாறு விண்­ணப்­பம் செய்­ய­லாம். இருப்­பி­னும் 90 நாள் கால­வ­ரம்பை நீட்­டிக்­கும் அதி­கா­ரம் கூட்டரசு நீதி­மன்­றத்­திற்கு உண்டு.

மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட 840 பேர், கருணை மனு நிரா­க­ரிக்­கப்­பட்ட 25 பேர், மரண தண்­ட­னையை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்­ய­வி­ருக்­கும் 476 பேர் ஆகி­யோ­ருக்­குப் புதிய சட்­டங்­கள் தண்­ட­னைக் குறைப்­புக்கு உத­வக்­கூ­டும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சில வழக்­கு­களில் தண்­ட­னை­களை மறு­ஆய்வு செய்து, 30 முதல் 40 ஆண்டு வரை­யி­லான ஆயுள் தண்­ட­னை­யா­கவோ ஆறு முதல் 12 பிரம்­ப­டி­க­ளா­கவோ குறைக்­கும் அதி­கா­ரம் நீதி­மன்­றத்­துக்கு உண்டு என்­றார் அவர்.

மலே­சி­யா­வில் தற்­போது கொலைக்­குற்­றம், பயங்­க­ர­வா­தச் செயல், பிணை ­பி­டிப்பு உள்­ளிட்ட 11 வகை­யான குற்­றங்­களுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­ப­டு­கிறது. இனி இவற்­றில் மாற்­றம் வரக்­கூ­டும் என்­ற­போதும் மரண தண்­டனை விதிக்­கும் அதி­கா­ர­மும் நீதி­மன்­றத்­திற்கு உண்டு.

போதைப்­பொ­ருள் கடத்­தல் வழக்­கு­களில் மரண தண்­ட­னைக்­குப் பதில் ஆயுள்­தண்­டனை விதிப்­பது குறித்து முடி­வெ­டுப்­ப­தில் மலே­சிய கூட்டரசு நீதி­மன்­றத்­துக்கே கூடு­தல் அதி­கா­ரம் உண்டு.