அமெரிக்கத் தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; எழுவர் மரணம்

அமெ­ரிக்­கா­வின் டென்­னசி மாநி­லத்­தில் உள்ள நேஷ்­வில் நக­ரைச் சேர்ந்த கவனண்ட் பள்ளி எனும் தனி­யார் தொடக்­கப் பள்­ளி­யில் நேற்று நடந்த துப்­பாக்­கிச்­சூட்­டில் மூன்று மாண­வர்­கள் உள்­பட ஆறு பேர் உயி­ரி­ழந்­த­னர்.

நேற்று முன்­தி­னம் அந்­தப் பள்­ளி­யின் முன்­னாள் மாண­வி­யான 28 வயது மாது இவ்­வாறு துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்த மூன்று மாண­வர்­க­ளுக்­கும் வயது ஒன்­பது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இவர்­க­ளு­டன், 60 வய­தா­கும் பள்ளி முதல்­வர், தற்­கா­லிக ஆசி­ரி­யர், காப்­பா­ளர் ஆகி­யோ­ரும் மாண்­ட­னர்.

துப்­பாக்­கிக்­கா­ர­ரைக் காவல்­து­றை­யி­னர் சுட்­டுக் கொன்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வத்தை அடுத்து அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் துப்­பாக்கி விற்­ப­னைக்­குத் தடை விதிக்­கும் மசோ­தா­வுக்கு ஒப்­பு­தல் அளிக்­கும்­படி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைத் தாம் மீண்­டும் வலி­யு­றுத்­து­வ­தா­கக் கூறி­னார்.

அதற்­கு­முன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய வெள்ளை மாளி­கைப் பேச்­சா­ளர் கார்னி ஜீன் பியர்ரி, குடி­ய­ர­சுக் கட்­சி­யி­னர் துப்­பாக்­கித் தடைக்கு ஒப்­பு­தல் அளிப்­ப­தற்­குள் மேலும் பல சிறார்­கள் ஆபத்தை எதிர்­கொள்­ளக்­கூடும் என்­ப­தைச் சுட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!