'சிங்கப்பூர்-ஹாங்காங் போட்டித்தன்மை மிகைப்படுத்தப்பட்டுள்ளது'

'சிங்கப்பூர்-ஹாங்காங் போட்டித்தன்மை மிகைப்படுத்தப்பட்டுள்ளது'

2 mins read

சிங்­கப்­பூர்-ஹாங்­காங் இடையே மிகக் கடு­மை­யான போட்டி நில­வு ­கிறது என்று கூறு­வது செய்­தித் தலைப்­பு­க­ளுக்கு வேண்­டு­மென்­றால் நன்­றாக இருக்­கும் என்­றும் உண்­மை­யில் அத்­த­கைய கருத்­து­கள் மிகைப்­ப­டுத்­தப்­பட்­டவை என்­றும் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

இரு நாடு­க­ளுக்­கும் தனித் தனி பலங்­கள் இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

உலக நாடு­க­ளின் பொரு­ளி­யல்­கள் ஒன்­றுக்­கொன்று சார்ந்­த­வை­யாக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர் சண்­மு­கம், சிங்­கப்­பூர் வளர்ச்சி அடைந்­தால் ஹாங்­காங் பல­ன­டை­யும் என்­று­ம் ஹாங்­காங் வளர்ச்சி அடைந்­தால் சிங்­கப்­பூர் பல­ன­டை­யும் என்­றும் கூறி­னார்.

இதன்­மூ­லம் இந்த வட்­டா­ரம் துடிப்­பு­டன் இருக்­கும் என்­றார் அவர்.

"புவி­யி­யல் ரீதி­யாக இவ்­விரு நாடு­க­ளின் அமைப்பு, அவற்­றின் செயல்­பாடு, வளர்ச்சி ஆகி­ய­வற்­றைக் கருத்­தில்­கொள்­ளும்­போது இரு நாடு­களும் சிறப்­பான நிலையை எட்­டும் என்ற நம்பிக்கை உள்ளது.

"ஒரு­வ­ரின் தோல்வி இன்­னொ­ரு­வ­ரின் வெற்றி என்ற அணு­கு­முறை இங்கு இல்லை," என்று ஐந்­தா­வது முறை­யாக நடத்­தப்­பட்ட 'சீனா மாநாடு: தென்­கி­ழக்­கா­சியா' நிகழ்­வில் கலந்­து­கொண்டு பேசிய திரு சண்­மு­கம் தெரி­வித்­தார்.

இந்த நிகழ்­வுக்கு சவுத் சைனா மார்­னிங் போஸ்ட் செய்தி நிறு­வ­னம் ஏற்­பாடு செய்­தது.

இந்த நிகழ்­வில் அர­சாங்­கப் பிரதி­நி­தி­களும் வர்த்­த­கத் தலை­வர்­களும் கலந்­து­கொண்டு உல­க­ளாவியப் போக்கை சீனா­வும் தென்­கி­ழக்­கா­சி­யா­வும் எவ்­வாறு வடி­வ­மைக்­கின்­றன என்­பது குறித்து கலந்­து­ரை­யா­டி­னர்.

இவ்­வாண்­டின் மாநாடு சிங்­கப்­பூ­ரில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்­ட­லில் நடை­பெற்­றது.

சிங்­கப்­பூ­ரும் ஹாங்­காங்­கும் உச்­சம் எட்­டி­யி­ருப்­பது அனை­

வ­ரும் அறிந்த ஒன்று என்­றும் அதில் ரக­சி­யம் ஏது­மில்லை என்­றும் திரு சண்­மு­கம் கூறி­னார்.

இதற்கு அந்த நாடு­க­ளின் ஆட்­சி­மு­றை­யும் நிலைத்­தன்­மை­யும் கார­ணம் என்­றார் அவர்.

சிங்­கப்­பூர் மூலம் அனைத்­

து­லக முத­லீடு, ஆசிய நாடு­

க­ளைச் சென்­ற­டை­வ­தாக அமைச்­சர் சண்­மு­கம் குறிப்­பிட்­டார்.

வலு­வான சட்­டக் கட்­ட­மைப்­பு­கள், 27 தடை­யற்ற வர்த்­தக ஒப்­பந்­தங்­கள், வர்த்­த­கம், நிதி, விமா­னப் போக்­கு­வ­ரத்து, நிபு­ணத்­

து­வச் சேவை­கள், கப்­பல் துறை முத­லி­ய­வற்­றுக்­கான முக்­கிய மைய­மாக திகழ்­வது ஆகி­யவை சிங்­கப்­பூரை வலு­வான நிலை­யில் வைத்­தி­ருப்­ப­தாக திரு சண்­மு­கம் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்­குப் பிறகு சிங்­கப்­பூர் மேலும் வலு­வ­டைந்­தி­ருக்­கிறது என்­பதே உலக நாடு­க­ளின் ஒரு­மித்த கருத்­தா­கும்.

"சிங்­கப்­பூ­ரில் முத­லீடு செய்­யப்­பட்ட பணம் பாது­காப்­பாக இருப்­பதை உலக நாடு­கள் உணர்கின்றன. சிங்­கப்­பூ­ரில் உள்ள உல­கத் தரம்­வாய்ந்த சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்பு, பகுத்­த­றிவு வாய்ந்த கொள்­கை­கள் ஆகி­ய­வற்­றால் இந்­நிலை ஏற்­பட்­டுள்­ளது," என்­றார் அமைச்­சர் சண்­மு­கம்.

தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ஆற்றல் சிங்கப்பூருக்கு இருப்பதாக அவர் கூறினார்.