மேம்படும் வேலை நிலவரம்; தொடர்ந்து சரியும் காலியிடங்கள்

மேம்படும் வேலை நிலவரம்; தொடர்ந்து சரியும் காலியிடங்கள்

2 mins read

உல­க­ள­வில் தொழில்­நுட்­பத் துறை­யில் ஆட்­கு­றைப்பு நிகழ்ந்து வரும் நிலை­யில் சிங்­கப்­பூ­ரில் உள்ள நிறு­வ­னங்­களில் தொழில்­நுட்­பத் திற­னா­ளர் வேலை­கள் அதி­க­மா­கக் காலி­யாக உள்­ள­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

காலி இடங்­களை நிரப்ப இய­லா­மல் அத்­த­கைய நிறு­வ­னங்­கள் முயன்றுவருவதாகவும் அமைச்­சின் வரு­டாந்­திர 'காலி வேலை­யிட நில­வர அறிக்கை 2022' தெரி­விக்­கிறது.

"பெரும் தொழி­ல்நுட்ப நிறு­வ­னங்­களில் ஆட்­கு­றைப்பு நடை­பெ­று­வ­தாக செய்­தி­கள் வெளி­யா­னா­லும் இங்கு தொழில்­நுட்­பத் திற­னா­ளர்­க­ளுக்­கான தேவை உள்­ளதை எங்­க­ளது ஆய்வு தெரி­விக்­கிறது," என்று அமைச்­சின் ஆய்வு மற்­றும் புள்ளி­வி­வ­ரத் துறை இயக்­கு­நர் ஆங் பூன் ஹெங் தெரி­வித்­தார்.

சிறப்­புத்­தி­றன்மிக்க வேலை­களை நிரப்ப முத­லா­ளி­கள் அதிக சம்­ப­ளம் தர­வும் தயா­ராக உள்­ள­தாக அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் காலி­யாக உள்ள 10 வேலை­களில் தொழில்­நுட்ப வேலை­களும் உள்­ள­தாக அறிக்கை குறிப்­பிட்­டது.

அலு­வ­லக நிர்­வாகி வேலை­களே காலி­யாக உள்ள வேலை­களில் பெரும்­பான்­மை­யாக உள்­ளன. 2021ஆம் ஆண்டு இந்த இடத்­தில் மென்­பொ­ருள் மற்­றும் பல்­லூ­டக திற­னா­ளர் வேலை இருந்­தது.

இவ்­வாண்டு காலி­யாக உள்ள நிர்­வா­கி­க­ளுக்­கான வேலை­கள் பெரும்­பா­லும் பொது நிர்­வா­கம் மற்­றும் கல்­வித்­து­றை­யில் இருப்­ப­தாக அறிக்கை தெரி­வித்­தது.

ஒட்­டு­மொத்­த­மாக, காலி­யாக உள்ள வேலை­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து மூன்­றா­வது காலாண்­டாக கடந்த டிசம்­பர் மாதம் 104,500க்குக் குறைந்­த­தா­க­வும் அது கூறி­யது.

சிங்­கப்­பூர் வேலைச் சந்­தை­யில் நில­வ­ரம் மேம்­பட்டு வரு­வதை இது காட்­டு­கிறது.

இருப்­பி­னும், கொவிட்-19 கொள்­ளை­நோய்க்கு முன்­னர் 2019ஆம் ஆண்டு டிசம்­பர் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த எண்­ணிக்கை அதி­கம். அந்த மாதத்­தில் காலி­யாக இருந்த வேலை­க­ளின் எண்­ணிக்கை 51,100.

2022ஆம் ஆண்டு முழு­மைக்­கும் காலி­யாக இருந்த வேலை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­போ­தி­லும் குறைந்­த­பட்­சம் ஆறு மாதங்­கள் வரை நிரப்­பப்­ப­டாத வேலை­க­ளின் எண்­ணிக்கை 35 விழுக்­காட்­டி­லி­ருந்து 27 விழுக்­காட்­டுக்­குக் குறைந்­தது.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­களும் பாது­காப்பு நிர்­வாக விதி­களும் விலக்­கப்­பட்­டது அதற்­குக் கார­ணம்.

நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள் மற்­றும் தொழில்­நுட்­பர்­கள் (பிஎம்­இடி) அல்­லாத வேலை­க­ளுக்­கான காலி­யி­டங்­கள் குறைந்­தன. இது­போன்ற வேலை­களை வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைக் கொண்டு நிரப்ப முத­லா­ளி­கள் முயன்­றது அதற்­குக் கார­ணம்.

இனி­வ­ரும் காலங்­களில் காலி­யாக உள்ள வேலை­க­ளின் எண்­ணிக்கை மித­மாக இருக்­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதே­நே­ரம் வேலைக்கு ஆள் எடுக்­கும் போக்கு சாத­க­மா­ன­தா­கத் தொட­ரும் என்றது அறிக்கை.

கடந்த ஆண்­டில் தொழில்­நுட்ப வேலை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தது.

குறிப்­பாக, மென்­பொ­ருள், இணை­யம் மற்­றும் பல்­லூ­ட­கத் திற­னா­ளர்­க­ளுக்கு அதிக தேவை காணப்­பட்­டது. அலுவலக நிர்­வாகி வேலைக்கு அடுத்த நிலை­யில் தொழில்­நுட்ப வேலை­கள் இருந்­தன.