புக்கிட் பாத்தோக்கில் பள்ளிப் பேருந்தின்கீழ் சிக்கி 5 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன்

புக்கிட் பாத்தோக்கில் பள்ளிப் பேருந்தின்கீழ் சிக்கி 5 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன்

2 mins read

7 வயது சிறு­வன் ஒரு­வன் பள்­ளிப் பேருந்­தின்­கீழ் சிக்கி ஐந்து மீட்­டர் தூரம் இழுத்­துச்­செல்­லப்­பட்ட சம்­ப­வம் புக்­கிட் பாத்­தோக்­கில் நிகழ்ந்­துள்­ளது. பேருந்­தி­லி­ருந்து இறங்­கிய சிறு­வன் அந்­தப் பேருந்­தின் முன்­னால் சென்று சாலை­யைக் கடக்க முயன்­ற­போது இவ்­வி­பத்து நிகழ்ந்­த­தாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரி­வித்­தது.

கடந்த திங்­கட்­கி­ழமை புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட் அவென்யூ 5ல் நிகழ்ந்த இச்­சம்­ப­வம் குறித்து அன்­றைய தினம் பிற்­ப­கல் 2 மணி­ய­ள­வில் தனக்­குத் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது. காவல்­துறை பேச்­சா­ளர் ஒரு­வ­ரும் இதே­போன்று தெரி­வித்­தார். அந்­தச் சிற்­றுந்து மோதி­ய­தில் மாண­வன் கீழே விழுந்­து­விட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

பேருந்­தின்­கீழ் சிறு­வன் இழுத்­துச் செல்­லப்­ப­டு­வ­தைப் பார்த்து திடுக்­கிட்ட தாம் உட­ன­டி­யாக ஓட்­டு­ந­ரைப் பார்த்து குரல் எழுப்­பி­ய­தாக சம்­ப­வத்தை நேரில் கண்ட ஸாங் செங்­குஸு, 67, என் பவர் கூறினார்.

பேருந்­தின் பின்சக்­க­ரங்­க­ளுக்கு இடை­யில் சிக்கி சிறு­வன் இழுத்­துச் செல்­லப்­பட்ட பின்­னர் பேருந்து நிறுத்­தப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார். தொடர்ந்து, கீழே இறங்­கி­வந்த ஓட்­டு­ந­ரும் 40 வயது மதிக்­கத்­தக்க பெண் ஒரு­வ­ரும் சிறு­வனை மீட்­ட­தா­க­வும் சிறு­வனை அழைத்­துச் செல்ல அங்கு வந்­தி­ருந்த சிறு­வ­னின் பாட்­டி­யும் ஐந்து வயது சகோ­த­ரி­யும் சம்­பவ இடத்­தில் இருந்­த­தா­க­வும் திரு ஸாங் தெரி­வித்­தார்.

தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது சிறு­வன் சுய­நி­னை­வு­டன் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது. சிற்­றுந்­தின் 57 வயது ஓட்­டு­நர் விசா­ர­ணையில் உதவி வரு­கி­றார். இந்­நி­லை­யில், காயங்­கள் கடு­மையாக இருந்­த­தா­க­வும் சிறு­வன் இன்­னும் வீடு­தி­ரும்­ப­வில்லை என்­றும் சிறுவனின் தந்தை நேற்று கூறி­னார்.