சீன அதிபர் ஸி கருத்து: சிங்கப்பூர்-சீன உறவு வட்டார நாடுகளுக்கு முன்மாதிரி

சீன அதிபர் ஸி கருத்து: சிங்கப்பூர்-சீன உறவு வட்டார நாடுகளுக்கு முன்மாதிரி

2 mins read
24216f4c-cfe5-4ab5-8bb6-9f5b7c0b7a15
-

சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் நில­வும் அருமையான உறவு, ஓர் அடை­யா­ள­மா­கத் திகழ்­கிறது என்­றும் அது வட்­டார நாடு­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யான ஒன்று என்­றும் சீன அதி­பர் ஸி ஜின்­பிங், சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங்­கி­டம் நேற்று தெரி­வித்­தார்.

இரு தலை­வர்­களும் பெய்­ஜிங்­கில் மக்­கள் மாமண்­ட­பத்­தில் நேற்று சந்­தித்­த­னர்.

வெளி­நாட்டுத் தலை­வர்­க­ளி­லேயே திரு லீ அடிக்­கடி சீனா­வுக்கு வருகை அளிக்கும் ஒரு தலை­வ­ராக இருக்­கி­றார் என்­பதை திரு ஸி சுட்­டி­னார்.

சீனா­வில் அண்­மைய நாடா­ளு­மன்றக் கூட்­டத்தை அடுத்து புதிய அர­சாங்­கம் அமைந்­தது. சீனா­வுக்கு வருகை அளிக்­கும்­படி பிர­த­மர் லீக்கு உட­னேயே அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

"சீனா தன்­னு­டைய வட்­டார அர­ச­தந்­திர நடை­மு­றை­யில் சிங்­கப்­பூ­ருக்கு எப்­போ­துமே முன்­னு­ரிமை அளித்து வந்­தி­ருக்­கிறது என்­ப­தற்கு இது தெள்­ளத்­தெ­ளி­வான ஓர் எடுத்­துக்­காட்டு.

"இரு நாடு­க­ளுக்­கும் இடைப்­பட்ட சிறப்புத் தன்மை வாய்ந்த, அணுக்க நட்பு­றவை இது பிர­தி­ப­லிக்­கிறது," என்று சீன அதி­பர் குறிப்­பிட்­டார்.

சீனா­வுக்கு வருகை அளித்து பழைய நண்­பர்­க­ளைச் சந்­தித்து, புதிய நண்­பர்­களை உரு­வாக்­கிக்கொண்டு ஆகப் புதிய நில­வ­ரங்­க­ளைப் பற்றி அறிந்­து­கொள்ள தமக்கு வாய்ப்பு கிடைத்திருப்­பது குறித்து மகிழ்ச்சி அடை­வ­தாக பிரதமர் கூறி­னார்.

கொரோனா காலத்­தி­லும் சிங்­கப்­பூ­ரும் சீனா­வும் ஒன்­றா­கச் சேர்ந்து பாடு­பட்டு, ஒன்று மற்­றொன்­றுக்கு ஆத­ர­வாக இருந்­த­தைச் சுட்­டிக்­காட்­டிய திரு லீ, அதன் ­மூ­லம் இரு நாட்டு உறவு இன்­னும் வலு­வாக ஆனது என்­றார்.

சிங்­கப்­பூர் உள்­ளிட்ட பல நாடு­களும் சீனா­வுன் பொரு­ளி­யல் உறவை மேம்­படுத்­து­வ­தில் மிக­வும் ஆர்­வ­மாக உள்ளன என்று கூறிய திரு லீ, தமது வருகை இரு தரப்பு ஒத்­து­ழைப்­பிற்­கும் உயர்­நி­லைச் சந்­திப்­பு­க­ளுக்­கும் புதிய ஊக்­கம் கொடுக்கும் என்று நம்­பிக்­கைத் தெரி­வித்­தார்.

திரு லீ இன்று சீனப் பிரதமர் லி சியாங்கை சந்திப்பார். இருவரும் இரு நாட்டு உறவு மேம்பாடு பற்றி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.