மத்தியப் பிரதேச கோயில் கிணறு இடிந்த சம்பவம்; 36 பக்தர்கள் பலியான சோகம்

மத்தியப் பிரதேச கோயில் கிணறு இடிந்த சம்பவம்; 36 பக்தர்கள் பலியான சோகம்

2 mins read
7213c193-e44c-43e4-9db2-7a68059be699
-

இந்­தி­யா­வின் மத்­தி­யப் பிர­தே­சத்­தில் இருக்­கும் இந்­தூர், பட்­டேல் நக­ரில் உள்ள பழ­மை­யான பாலேஷ்­வர் மகா­தேவ் கோயி­லில் கிணறு மூடி இடிந்த விபத்­தில் பலி­யான பக்­தர்­கள் எண்­ணிக்கை 36 ஆக அதி­க­ரித்­து­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

காயம் அடைந்த பல­ரும் மருத்­து­வ­மனையில் அனு­ம­திக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். சம்­பவ இடத்­திற்கு நேற்று சென்ற அந்த மாநில முதல்­வர் சிவ்­ராஜ் சிங் சவு­கான் காயம் அடைந்­த­வர்­களுக்கு இல­வச சிகிச்சை அளிக்­கப்­படும் என்று அறி­வித்­தார்.

சம்­ப­வம் பற்றி விசா­ரணை நடத்த நீதி­பதி தலை­மை­யில் குழு அமைக்­கப்­படும் என்­றும் யாராவது குற்­றம் செய்­தி­ருந்­தால் அவர்­கள் தப்ப முடி­யாது என்­றும் முதல்­வர் தெரி­வித்­தார்.

விபத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­திற்குத் தலா ரூ.5 லட்­சம் இழப்­பீ­டும் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு தலா ரூ.50,000 பண­மும் வழங்க மத்­தி­யப் பிர­தேச முதல்­வர் உத்­த­ர­விட்­டார். அமைச்­ச­ர்களும் நேற்று சம்­பவ இடத்­திற்­குச் சென்­ற­னர்.

இத­னி­டையே, மாண்­ட­வர்­க­ளுக்­கும் காயம் அடைந்­த­வர்­க­ளுக்­கும் உத­வித் தொகை வழங்­கப்­படும் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­தார். தேவையான இதர உத­வி­களும் கிடைக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

சம்­ப­வம் நிகழ்ந்த கோயில் கிணற்­றில் நேற்­றும் மீட்பு நட­வ­டிக்கை தொடர்ந்­தது.

பாலேஷ்­வர் மகா­தேவ் கோயி­லில் இருக்­கும் 40 அடி­ ஆழ பழ­மை­யான கிணறு கான்­கி­ரீட் பாலங்களால் மூடப்­பட்டு இருந்­தது.

ராம நவ­மியை முன்­னிட்டு கோயி­லில் திரண்ட ஏராளமான பக்­தர்­களில் பல­ரும் அந்­தப் பாலங்களின்மீது நின்­று­கொண்டு இருந்­த­போது எடை தாங்­கா­மல் கான்கிரீட் மூடிகள் உடைந்­தன.

பக்­தர்­கள் பல­ரும் கிணற்­றுக்­குள் விழுந்­த­னர். கிணற்­றின் சுவ­ரும் இடிந்து விழுந்­த­தால் இடி­பா­டு­களில் பல­ரும் சிக்­கிக்கொண்­ட­னர். அந்­தத் துயர சம்­ப­வத்­ தில் 35 பேர் மரணமடைந்­து­விட்­ட­னர். 14 பேர் மீட்­கப்­பட்­ட­னர். டஜன் கணக்­கான பக்தர்கள் காயம் அடைந்­துள்­ள­னர்.

ஒருவரைக் காண­வில்லை என்று கூறப்­பட்டது. அவரின் உடலும் நேற்று மீட்கப்பட்டது. தேடி மீட்­கும் பணி வியாழக்­கி­ழமை நண்­பகலில் தொடங்கி­ நேற்றும் தொடர்ந்தது என்று இந்தூர் மாவட்ட ஆட்­சி­யர் டி.இளை­ய­ராஜா தெரி­வித்­தார். மீட்­புப் பணி­யில் ராணு­வத்­தி­னர் உள்­ளிட்ட 75 பேர் ஈடு­பட்டு வரு­வ­தா­க­வும் கூறப்­பட்­டது.