பினாங்கு தீவு மாநகர் மன்ற மேயராக ராஜேந்திரன் நியமனம்

பினாங்கு தீவு மாநகர் மன்ற மேயராக ராஜேந்திரன் நியமனம்

1 mins read
323f3299-db54-4c83-88d0-b8c0a9c5aad2
-

பினாங்கு தீவு மாந­கர் மன்­றத்­தின் அடுத்த மேய­ரா­கப் பொறுப்­பேற்­க ­இருக்கிறார் திரு ராஜேந்­தி­ரன் அந்தோனி, 60 (படம்).

மலே­சிய வர­லாற்­றில் இந்­திய வம்­சா­வளி­யைச் சேர்ந்த ஒரு­வர் மேய­ராக நிய­மிக்­கப்­ப­டு­வது இதுவே முதன்­முறை.

வரும் மே மாதம் 5ஆம் தேதி திரு ராஜேந்­தி­ரன் மேய­ரா­கப் பதவி­யேற்­பார்.

"மலே­சி­யா­வில் முதன்­மு­றை­யாக இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த ஒரு­வர் மேய­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தன் மூலம் வர­லாறு படைக்­கப்­பட்­டுள்­ளது," என்று மாநில ஆட்­சிக்­குழு உறுப்­பி­னர் ஜக்­தீப் சிங் டியோ கூறி­னார்.

"மலே­சி­யா­வில் மேயர் பதவி வகிக்­கும் ஒரே இந்­தி­யர் திரு ராஜேந்­தி­ரன்­தான்," என்­றும் அவர் சொன்­னார்.

கடந்த 37 ஆண்­டு­களாக பினாங்கு தீவு மாந­கர் மன்­றத்­தில் பணி­யாற்றி வருகிறார் திரு ராஜேந்­தி­ரன்.

மாநகர் மன்றத்தின் முன்னைய பொறியியல் பிரிவு இயக்குநரான இவர், இப்போது அதன் செயலாளராக இருந்து வருகிறார்.

மேய­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது தமக்­குக் கிடைத்­துள்ள மிகப் பெரிய கௌர­வம் என்று இவர் குறிப்­பிட்­டார்.

ஓய்வுபெற்ற பிறகும் அரசாங்க சேவையில் தமது பணிக்காலத்தை நீட்டித்ததற்காக பினாங்கு மாநில அரசாங்கத்திற்கும் இவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

"பினாங்கு மக்­க­ளின், குறிப்­பாக வசதி குறைந்­த­வர்­க­ளின் வாழ்க்­கைத் தரத்­தை­யும் பொதுப் போக்­கு­வ­ரத்து அமைப்­பின் தரத்­தை­யும் உயர்த்த விரும்­பு­கி­றேன்," என்றார் திரு ராஜேந்திரன்.