வணிகம் தொடர புதிய அடிப்படை விதிகள்: பிரதமர் லீ அறைகூவல்

வணிகம் தொடர புதிய அடிப்படை விதிகள்: பிரதமர் லீ அறைகூவல்

1 mins read
36adb898-b525-4bcc-9545-ad3b689139fb
-

உல­க­ளா­விய வணி­கம் பிள­வு­ப­டா­மல் தொடர்ந்து இதே வேகத்­தில் நடை­பெற வேண்­டுமெனில் புதிய அடிப்­படை விதி­கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் அறை­கூ­வல் விடுத்­துள்­ளார்.

அமெ­ரிக்கா-சீனா இடை­யிலான உத்­தி­பூர்வ போட்­டி­யும் மற்ற நாடு­கள் அவ்­விரு நாடு­களில் ஒன்­றன் பக்­கம் சாய்­வ­தும் அதி­க­ரித்து வரும் வேளை­யில் பிர­த­மர் லீ புதிய அடிப்­படை விதி­க­ளுக்­கான தேவையை வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

எந்த ஒரு நாட்­டை­யும் மிகு­தி­யா­கச் சார்ந்­தி­ருக்­கக்­கூ­டாது என்ற திரு லீ, உலக வணிக நிறு­வ­னக் கட்­ட­மைப்­பின்­கீழ் ஒன்­றாக இணைந்து செயல்­பட விரும்­பும் நாடு­கள் முன்­னோக்­கிச் செல்ல இன்­னும் வழி இருப்­ப­தா­கத் தாம் நம்­பு­வ­தா­க­வும் கூறி­னார்.

பிர­த­மர் லீயின் ஒரு வார சீனப் பய­ணம் நேற்­று­டன் முடி­விற்கு வந்த நிலை­யில், சிங்­கப்­பூர் ஊட­கங்­க­ளி­டம் பேசியபோது அவர் இவ்­வாறு சொன்­னார்.

முன்னதாக, சீனப் பிரதமர் லி சியாங்கை நேற்றுக் காலை திரு லீ சந்தித்தார்.

அப்போது, சீனா­வின் புதிய அர­சாங்­கம் கு­றிக்­கோ­ளு­டன் கூடிய வரை­வுத்­திட்­டத்­தைச் செயல்­படுத்த முனைப்பு காட்­டி­வரும் நிலை­யில், அது சிங்­கப்­பூ­ரு­டன் இணைந்து செய­லாற்­ற­வும் நவீன­மயம், வளர்ச்சி தொடர்­பான பரி­மாற்­றங்­களை முடுக்­கி­வி­ட­வும் விரும்­பு­கிறது என்று பிரதமரிடம் திரு லி கூறினார்.

'பிர­த­மர் லீ, சீன மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மான நீண்­ட­கால நண்­பர்' என்றார் அவர்.

சிங்­கப்­பூ­ரும் சீனா­வும் இரு­தரப்பு உறவை முன்­னெடுத்­துச் செல்ல மிக வலு­வான அடிப்­படை­யைக் கொண்­டுள்­ளன என்று பிர­த­மர் லீ தமது தொடக்க உரை­யில் குறிப்­பிட்­டார்.