தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தள்ளாத வயதில் வாழ்விலும் விளையாட்டிலும் சாதனை

2 mins read
33252a57-ab40-4bfe-8548-fd2272c801c7
-

போலந்­தில் நடை­பெற்ற உலக மாஸ்­டர்ஸ் திடல்­த­டப் போட்டி யில் 90 முதல் 95 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான பிரி­வில் இந்­தி­யாவை சேர்ந்த 95 வயது பக­வானி தேவி (படம்) மூன்று தங்­கப் பதக்­கங்­கள் வென்று முத்­திரை பதித்­துள்­ளார்.

60 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யம், குண்டு எறி­தல், வட்டு எறி­தல் ஆகிய மூன்று பிரி­வு­களில் அவர் வாகை சூடி­னார். அவர் புது­டெல்லி திரும்­பி­ய­போது அவரை மேள­தா­ளங்­கள் முழங்க உற­வி­னர்­கள் வர­வேற்­ற­னர்.

இளை­யர்­கள் கடு­மை­யாக உழைத்து, வெற்­றிக்­காக பாடு­பட வேண்­டும் என்று பக­வானி தேவி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார். குழந்­தை­கள் விளை­யாட்­டில் ஈடு­ப­டு­வ­தற்கு பெற்­றோர் ஆத­ரவு அளிக்க வேண்­டும் என்­றும் சொந்த நாட்­டுக்­காக பதக்­கம் வெல்­வ­தற்கு ஏற்ற வகை­யில் அவர்­களை தயார் செய்ய வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.

அரி­யானா மாவட்­டத்­தைச் சேர்ந்த பக­வானி தேவிக்கு 12

வய­தில் திரு­ம­ணம் செய்து வைக்­கப்­பட்­டது. 30 வய­தில் அவ­ரது கண­வ­ரும் ஆண் குழந்­தை­யும் இறந்­த­னர். தனது மகள் மற்­றும் வயிற்­றில் உள்ள குழந்­தை­யின் நலன் கருதி பக­வானி தேவி மறு­தி­ரு­ம­ணம் செய்­து­கொள்­ள­வில்லை.

நான்கு ஆண்­டு­கள் கழித்து அவ­ரது 8 வயது மகளும் உயி­ரி­ழந்­தார். இருப்­பி­னும், மனந்­த­ள­ரா­மல் வயல்­வெ­ளி­யில் வேலை செய்து தமது மகனை வளர்த்­தார். இறு­தி­யாக அவ­ரது முயற்­சி­யில் பலன் கிட்­டி­யது. அவ­ரது மக­னுக்கு டெல்லி மாந­க­ராட்­சி­யில் வேலை கிடைத்­தது. அவர்­க­ளின் குடும்பப் பொரு­ளா­தார சூழ்­நி­லை­யும் மேம்­பட்­டது.

முது­மை­யி­லும் திடல்­த­டப் போட்­டி­களில் அசத்­தும் பகவானி தேவி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஃபின்­லாந்­தில் நடை­பெற்ற திடல்தடப் போட்­டி­யில் மூன்று தங்க பதக்­கங்­கள் வென்­று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.