டிரம்ப்மீதான குற்ற வழக்கு: ஆதரவும் எதிர்ப்பும்

2 mins read

முன்­னாள் அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் மீது குற்ற வழக்கு தொட­ரப்­பட்ட விவ­கா­ரத்­தில் அமெ­ரிக்க மக்­கள் வெவ்­வேறு வித­மாக கருத்­து­க­ளைத் தெரி­வித்துள்­ள­னர்.

அவர் மீது வழக்­குத் தொடுக்­கப்­பட்­டது சரி­தான் என அமெ­ரிக்­கர்­களில் 49 விழுக்­காட்­டி­னர் கரு­து­வ­தாக ராய்ட்­டர்ஸ்/இப்­சோஸ் நடத்­திய கருத்­தாய்­வில் தெரியவந்­தது.

கடந்த புதன் மற்­றும் வியாழக்­ கி­ழ­மை­களில் நடத்­தப்­பட்ட ஆய்­வில் அமெ­ரிக்­கர்­க­ளின் கருத்து பிள­வு­பட்­டி­ருந்­தா­லும் அதி­பர் தேர்­த­லுக்­கான குடி­ய­ர­சுக் கட்­சி­யின் 2024 வேட்­பா­ளர் நிய­ம­னத்­தில் திரு டிரம்ப்புக்கு வெற்றி கிடைப்­ப­து­போல ஆய்­வின் முடிவு­ அமைந்­தி­ருந்­தது.

அர­சி­யல்­வா­தி­களில் குடி­ய­ர­சுக் கட்­சி­யி­னர் இன்­னும் திரு டிரம்ப்­பின் பக்­கமே உள்­ள­னர். இந்த வழக்கு அடுத்த ஆண்டு திரு டிரம்ப்­புக்கு வாக்­க­ளிப்­ப­தற்­கான வாய்ப்பை தங்­க­ளுக்கு அதி­கப்­ப­டுத்தி இருப்­ப­தாக 40% குடி­ய­ர­சுக் கட்­சி­யி­னர் கூறி­னர். அந்­தக் கட்­சி­யி­ன­ரில் 12% மட்­டுமே தங்­க­ளது ஆத­ரவு திரு டிரம்ப்­புக்கு இல்லை என்­ற­னர்.

அதே­நே­ரம், இந்த வழக்கு அதி­பர் தேர்­த­லில் எந்த ஒரு தாக்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­தாது என 38% தெரி­வித்­த­னர். குடி­ய­ர­சுக் கட்சி சார்­பில் வேட்­பா­ள­ராக யாரை முன்­னி­லைப்­ப­டுத்­து­வீர்­கள் என்று கேட்­கப்­பட்ட கேள்­விக்கு 58 விழுக்­காட்­டி­னர் திரு டிரம்ப் பெயரை உச்­ச­ரித்­த­னர்.

குற்ற வழக்கு தொடுக்­கப்­பட்­ட­துமே தங்­க­ளது அர­சி­யல் வாழ்க்கை முடிந்­து­விட்­டது என பெரும்­பா­லான அர­சி­யல்­வா­தி­கள் கரு­த­லாம். ஆனால் திரு டிரம்ப் அவ்­வாறு கரு­த­வில்லை.

மேலும், அடுத்த அதி­பர் தேர்­த­லுக்கு அவர் உற்­சா­கத்­து­டன் தயா­ராகி வரு­கி­றார். அவர் தமது ஆத­ர­வா­ளர்­க­ளி­டம் மின்­னஞ்­சல் வாயி­லாக நிதித் திரட்­டில் ஈடு­பட்­டார்.

"உங்­க­ளுக்­கா­கப் பாடு­படும் என் மீதான எதிர்த்­த­ரப்­பி­ன­ரின் தாக்­கு­தல் இது," என்று வழக்கை குறிப்­பிட்ட அவ­ருக்கு ஒரு சில நாள்­க­ளி­லேயே US$10 மில்­லி­யன் (S$13.31 மில்­லி­யன்) திரண்­டது.