திருமணத்தில் துப்பாக்கியால் சுட்ட மணப்பெண் தலைமறைவு

திருமணத்தில் துப்பாக்கியால் சுட்ட மணப்பெண் தலைமறைவு

1 mins read
688fa97b-fad6-4265-9322-c784d811fefe
-

இந்­தி­யா­வின் உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், ஹத்­ராஸ் மாவட்­டத்­தில் தமது திரு­ம­ணத்­தின்­போது மேல்­நோக்கி துப்­பாக்­கி­யால் சுட்­டு­விட்டு தலை­ம­றை­வான மணப்­பெண்­ணைக் காவல்­து­றை­யி­னர் தேடி வரு­கின்­ற­னர்.

மணமகனுக்குப் பக்கத்தில் அமர்ந்­திருந்த அந்த மணப்­பெண், மாலை அணிவிப்பு சடங்கிற்குப் பிறகு வானை நோக்கி நான்கு முறை துப்­பாக்கி­யால் சுடு­வ­தைக் காட்­டும் காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வி­யது.

மணமகன் குழப்பத்தில் இருப்பதுபோல காணொளியில் தெரிந்தது.

அந்த மணப்­பெண்­ணின் உற­வி­னர் ஒரு­வர், அக்­கா­ணொ­ளியை எடுத்து சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றம் செய்­த­தாக டைம்ஸ் ஆஃப் இந்­தியா செய்தி குறிப்­பிட்­டது.

அடை­யா­ளம் தெரி­யாத ஆட­வர் ஒரு­வர், அப்­பெண்­ணி­டம் துப்­பாக்­கியை வழங்­கு­வது காணொ­ளி­யில் தெரிந்­தது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து தலை­ம­றை­வான அந்த 23 வயது பெண்­ணுக்கு எதி­ராக காவல்­துறையினர் வழக்குப் பதி­வு­செய்­துள்­ள­னர்.

தன்னை கைதுசெய்­து­வி­டு­வார்­கள் என அஞ்சி, அப்­பெண் தலை­ம­றை­வா­கி­விட்­ட­தா­கக் காவல்­து­றை­யி­னர் கூறி­னர்.

இந்­தி­யா­வின் சில வட­மாநிலங்­களில் திரு­ம­ணக் கொண்­டாட்­டங்­க­ளின்­போது துப்பாக்­கி­யால் வானை நோக்­கிச் சுடுவது வழக்­கமான ஒன்று.

ஆனால், கீழே விழும் துப்­பாக்­கித் தோட்டாக்­களால் காயங்­களும் சில வேளை­களில் மர­ணங்­களும் ஏற்­ப­டு­கின்­றன.

இந்­தி­யச் சட்­டத்­தின்­கீழ், துப்­பாக்­கி­யைத் தவ­றா­கப் பயன்­படுத்தி மற்­ற­வர்­க­ளுக்கு ஆபத்து விளை­விக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­வோ­ருக்கு சிறைத் தண்­டனை அல்­லது அப­ரா­தம், அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

வானை நோக்கி துப்­பாக்­கி­யால் சுடு­ப­வர் மீது வழக்­குப்­பதிவு செய்­யா­விட்­டா­லும் விசா­ரணை நடத்­தப்­படும் என்று 2016ஆம் ஆண்டு உத்­த­ரப் பிர­தேச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.