'மூப்படையும் சமூகம் தொடர்பில் நேர்மறைச் சிந்தனை தேவை'

'மூப்படையும் சமூகம் தொடர்பில் நேர்மறைச் சிந்தனை தேவை'

2 mins read
d741cb92-1e24-4213-a08a-e6e967b7c8ed
-

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

செய்தி ஆசி­ரி­யர்

பொரு­ளி­ய­லுக்­குச் சுமை­யாக அமை­யக்­கூ­டிய அதி­க­ரிக்­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு செல­வு­கள் போன்ற மூப்­ப­டை­யும் சமூ­கம் எதிர்­நோக்­கக்­கூ­டிய கசப்­பான உண்­மை­யைத் தவிர்க்க, அனை­வ­ரும் நேர்­ம­றை­யான சிந்­த­னை­யைக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

வய­து­வா­ரி­யான பல்­வேறு பிரி­வி­ன­ரி­டையே நில­வும் போட்­டித்­தன்­மை­யால் சமூ­கத்­தில் பிள­வு­கள் ஏற்­ப­டு­வ­தை­யும் அவர் சுட்­டி­னார்.

மூப்­ப­டை­தலை ஆக்­க­க­ர­மான நோக்­கு­டன் எதிர்­கொள்ள வேண்­டும் என்று கூறிய பிர­த­மர், குடும்­பத்­தி­னர் வீட்­டில் முதி­யோ­ரு­டன் தொடர்­பில் இருப்­ப­தும் கலந்­து­ற­வா­டு­வ­தும் முக்­கி­யம் என்­றார்.

வேலை­யி­டத்­தில் முத­லா­ளி­கள் முதிய ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு தந்து அவர்­க­ளது அனு­ப­வங்­க­ளை­யும் திற­மை­க­ளை­யும் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று அவர் கூறி­னார்.

"முதி­யோ­ருக்கு மரி­யாதை செலுத்­தும் கலா­சா­ரத்தை ஒரு சமு­தா­ய­மாக சிங்­கப்­பூர் வலுப்­படுத்­த­ வேண்­டும்.

முதி­யோ­ரைப் புரிந்­து­கொள்­ளு­தல், அவர்­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை அறி­தல், மன­தைப் புண்­ப­டுத்­தும் வகை­யில் அவர்­களை வர்­ணிப்­ப­தைத் தவிர்த்­தல் ஆகி­ய­வற்­றின் மூலம் இது சாத்­தி­ய­மா­கும்," என்­றார் பிர­த­மர்.

'மூப்­ப­டை­யும் சிங்­கப்­பூர்: எதிர்­கொள்ள வேண்­டிய பிரச்­சி­னை­களும் சவால்­களும்' எனும் தலைப்­பி­லான நூல் வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் நேற்று திரு லீ உரை­ஆற்­றி­னார்.

இந்நிகழ்ச்சி, சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ‌‌‌‌‌‌‌ஷா அறக்­கட்­டளை முன்­னாள் மாண­வர் சங்­கக் கட்­ட­டத்­தில் நடை­பெற்­றது.

பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பேரா­சி­ரி­ய­ரும் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டாக்­டர் எஸ். வாசு, இணைப் பேரா­சி­ரி­யர்­கள் பில்­வீர் சிங், ஸ்ரீநி­வா­சன் சொக்­க­நா­தன் மூவ­ரும் இணைந்து இந்­நூ­லைத் தொகுத்­துள்­ள­னர்.

மூப்­ப­டை­த­லால் ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்­சி­னை­க­ளைக் களைய அர­சாங்­கம் முன்­னெ­டுக்கவிருக்கும் மூன்று வழி­க­ளைப் பிர­த­மர் தம் உரை­யில் கோடிட்­டுக்­காட்­டி­னார்.

முத­லா­வது, மக்­கள் தொகை நில­வ­ரத்­துக்கு ஏற்­ற­வாறு ஓய்­வு­பெ­றும் வய­தை­யும் மறு­வே­லை­வாய்ப்­புக்­கான வய­தை­யும் உயர்த்­து­வது. 2030ஆம் ஆண்­டுக்­குள் இவை முறையே 65 மற்­றும் 70க்கு நீட்­டிக்­கப்­படும்.

இரண்­டா­வது, ஓய்­வு­கா­லத்­திற்­குப் போது­மான அளவு சேமிப்பு இருப்­பதை உறுதி செய்­வது. இதன் தொடர்­பி­லான மத்­திய சேம­நிதி மாற்­றங்­க­ளைப் பிர­த­மர் விவ­ரித்­தார்.

மூன்­றா­வது, மூப்­ப­டை­யும் சமூ­கத்­தின் அதி­க­ரிக்­கும் தேவை­களை ஈடு­கட்­டும் வித­மாக, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை­களை வலுப்­ப­டுத்­து­வது.

மூப்­ப­டை­யும் சமூ­கத்­திற்­காக இது­வரை சிங்­கப்­பூர் என்ன செய்­துள்­ளது, என்ன செய்­து­கொண்­டி­ருக்­கிறது, என்ன செய்­ய­வேண்­டும் என்­பதை இந்த நூல் எடுத்­து­ரைப்­ப­தாக இதன் தொகுப்­பாளர்­களில் ஒரு­வ­ரான டாக்­டர் எஸ். வாசு குறிப்­பிட்­டார். நூலின் அச்­சுப்­பி­ர­தியை $45க்கும் மின்­னூலை $36க்கும் பெற்­றுக்­கொள்­ள­லாம் எனத் தெரிவிக்கப்பட்டது.