அக்கறைகள் கவனத்தில் கொள்ளப்படும்: அமைச்சர் லீ

அக்கறைகள் கவனத்தில் கொள்ளப்படும்: அமைச்சர் லீ

3 mins read

வீடமைப்பு, திட்டமிடல் உத்திகள் குறித்த பெருந்திட்ட மறுஆய்வு

வீட­மைப்பு, திட்­ட­மி­டல் ஆகி­ய­வற்­றுக்­கான சிங்­கப்­பூ­ரின் உத்­தி­கள் காலத்­துக்­கேற்­ற­வாறு மக்­க­ளின் அக்­க­றை­க­ளை­யும் விருப்­பங்­க­ளை­யும் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் திருத்தி அமைக்­கப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ கூறி­யி­ருக்­கி­றார்.

அடுத்து வரை­யப்­ப­ட­வி­ருக்­கும் பெருந்­திட்­டத்­தில் இந்த அம்­சங்­கள் சேர்க்­கப்­படும் என்­றார் அவர்.

பெருந்­திட்­டத்­துக்­கான மறு­ஆய்வு அடுத்த இரண்டு அல்­லது மூன்று ஆண்­டு­க­ளுக்கு நடை­பெ­றும். அதற்­க­டுத்த 10 முதல் 15 ஆண்­டு­க­ளுக்­கான நிலப் பயன்­பாடு, மேம்­பாட்­டுத் திட்­டங்­களில் அதன் முடி­வு­கள் பயன்­ப­டுத்­தப்­படும்.

சிங்­கப்­பூ­ரின் அடுத்த 50 ஆண்­டு­க­ளுக்­கான மேம்­பாட்­டுத் திட்­டத்­தை­வி­ட­வும் அது விரி­வாக இருக்­கும் என்­றார் அமைச்­சர்.

அதி­ப­ரின் உரை தொடர்­பான தமது அமைச்­சின் பிற்­சேர்க்­கை­யில் திட்­டங்­களை விவ­ரித்த திரு லீ, தற்­போது சிங்­கப்­பூ­ரில் 80 விழுக்­காட்­டி­னர் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் வசிப்­ப­தைச் சுட்­டி­னார்.

நாடு வளர்ச்­சி­ய­டை­யும் வேளை­யில், மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை, மாறி­வ­ரும் சமூக வழக்­கங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்ப பொது வீட­மைப்­புத் திட்­டங்­களும் அது தொடர்­பான கொள்­கை­களும் தொடர்ந்து மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்­டும் என்­றார் திரு லீ.

ஒற்­றை­ய­ரா­க­வும் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளா­க­வும் வாழ்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. இளைய சிங்­கப்­பூ­ரர்­களில் கூடு­த­லா­னோர் சுதந்­தி­ர­மாக வாழ விரும்­பு­கின்­ற­னர் என்­றார் அவர்.

"கழக வீடு­களும் குடி­யி­ருப்­புப் பேட்­டை­களும் பழை­ய­ன­வா­கி­வ­ரும் நிலை­யில், முதிர்ச்­சி­ அடையாத பேட்­டை­களும் காலப்­போக்­கில் மேம்­பாடு கண்­டுள்­ளன.

"சிங்­கப்­பூ­ரில் வீடு­கள் தொடர்ந்து கட்­டுப்­ப­டி­யான விலை­யில் இருப்­ப­தை­யும் வீட­மைப்­புப் பேட்­டை­கள் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­ன­வா­க­வும் ஒருங்­கி­ணைப்­பும் நீடித்த நிலைத்­தன்­மை­யும் பொருந்­தி­ய­ன­வா­க­வும் இருப்­பதை உறுதி செய்­யும் வகை­யில் நாட்­டின் வீட­மைப்­புக் கொள்­கை­கள் மாற்­றி­ய­மைக்­கப்­படும்," என்று அமைச்­சர் லீ குறிப்­பிட்­டார்.

முதன்­முறை வீடு வாங்­கு­வோ­ருக்­கும் குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்­கும் ஆத­ரவு தரு­வது உள்­ளிட்ட தமது அமைச்­சின் முன்­னு­ரி­மை­களை அவர் கோடிட்­டுக் காட்­டி­னார்.

ஒற்­றை­யர், மூத்­தோர், உடற்­கு­றை­யுள்­ளோர் போன்­றோ­ருக்கு வலு­வான ஆத­ரவு தரும் வகை­யில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் அதன் குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளைத் தொடர்ந்து மேம்­ப­டுத்தி, வீட­மைப்பு தொடர்­பில் அவர்­க­ளுக்கு வெவ்­வேறு வாய்ப்­பு­களை வழங்­கும் என்று திரு லீ கூறி­னார்.

மொத்­தத்­தில் ஒரு நாடாக சிங்­கப்­பூ­ரின் முன்­னு­ரி­மை­கள் குறித்­தும் குறை­வான வளங்­களை அதி­க­ரிக்­கும் தேவை­க­ளுக்கு ஏற்ப ஒதுக்­கீடு செய்­வது குறித்­தும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கருத்­தி­ணக்­கத்தை இந்­தத் திட்­ட­மி­டல் பிர­தி­ப­லிக்­கும் என்று அவர் சொன்­னார்.

இவ்­வே­ளை­யில், வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்­குப் போதிய அள­வில் நிலப்­ப­ரப்­பை­யும் வளங்­க­ளை­யும் ஒதுக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் அவர் நினை­வு­ப­டுத்­தி­னார்.

கட்­டு­மா­னத் திட்­டங்­களில் ஏற்­பட்ட தாம­தம் குறித்­துக் கருத்­து­ரைத்த அமைச்­சர், கொவிட்-19 கிரு­மிப் பர­வல் பெரிய அள­வில் இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­ய­தைக் குறிப்­பிட்­டார்.

அதன் பிறகு நிலைமை தற்­போது மேம்­பட்டு வரு­வதை அவர் சுட்­டி­னார்.

இந்த ஆண்­டுக்­கும் 2025ஆம் ஆண்­டுக்­கும் இடை­யில் கிட்­டத்­தட்ட 100,000 வீடு­கள் கட்டி முடிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பொது வீட­மைப்பு வீடு­களும் தனி­யார் வீடு­களும் இவற்­றில் அடங்­கும். இவற்­றில் 40,000 வீடு­கள் இந்த ஆண்­டிற்­குள் கட்டி முடிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தேவைக்கேற்ப வீடு­கள் கிடைப்­ப­தை­யும் சொத்­துச் சந்­தையை நிலை­யாக வைத்­தி­ருப்­ப­தை­யும் உறுதிசெய்­யும் நட­வடிக்­கை­கள் தொடரும் என்று அமைச்­சர் லீ உறு­தி­ய­ளித்­தார்.