சிங்கப்பூருக்காக களமிறங்கும் இந்திய ஊழியர்கள்

சிங்கப்பூருக்காக களமிறங்கும் இந்திய ஊழியர்கள்

2 mins read
58d8027c-3fba-4ec3-b51c-825171351733
-
multi-img1 of 2

ஆ. விஷ்ணு வர்­தினி

சிங்­கப்­பூர் தேசிய கிரிக்­கெட் அணிக்கு தமிழ்­நாட்­டைச் சேர்ந்த திரு காளி­முத்து ரமேஷ், திரு ஊமைத்­துரை திலி­பன் என்ற இரு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இரு­வ­ரும் ஆல்­ர­வுண்­டர்களாக எதிர்­வ­ரும் ஆசிய ஆண்­கள் கிரிக்­கெட் பிரி­மி­யர் கிண்­ணப் போட்­டி­யில் சிங்­கப்­பூ­ருக்­காக விளை­யாட உள்­ளார்­கள்.

செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று சிங்­கப்­பூர் தேசிய அணிக்­குத் தேர்­வான தக­வல் கிட்­டி­ய­தும் எல்­லை­யில்லா மகிழ்ச்சி அடைந்­த­தாக தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார் இரா­ம­நா­த­புர மாவட்­டம், கீழ்க்­கு­டி­யைச் சேர்ந்த திரு ரமேஷ்.

கடந்த வாரம் முதல் பயிற்சி சுற்­றுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்த இவர், அரை நம்­பிக்­கையே கொண்­டி­ருந்­த­தா­க­வும் தாம் உட்பட குடும்­பத்­தார் அனை­வருக்­கும் இது பெருமை தேடித் தந்­துள்­ள­தா­க­வும் நெகிழ்ச்­சி­யுடன் கூறி­னார்.

பதின்ம வயது முதல் கிரிக்­கெட் மட்­டையை ஏந்தத் தொடங்­கிய திரு ரமேஷ், சொந்த நாடான இந்­தி­யா­வுக்­காக விளை­யாட 2006ல் எடுத்த முயற்சி ஈடே­ற­வில்லை. சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­திக்­கும் பெரும் வாய்ப்பு கிட்­டி­ய­தன்­மூ­லம் தமது வாழ்க்கை இலட்­சி­யம் நிறை­வேறி உள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"எவ்­வித முறை­யான பயிற்­சி­யும் நான் மேற்­கொண்­ட­தில்லை. பொழு­து­போக்­குக்­காக மட்­டு­மே­கிரிக்­கெட் எனச் சோர்ந்­து­போன எனக்கு சிங்­கப்­பூர் பல்­வேறு வாய்ப்­பு­களை அளித்­துள்­ளது. எனது திற­மையை நிரூ­பிக்­க­வும் வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது," என்­றார் திட்ட நிர்­வா­கி­யா­கப் பணி­புரிந்து­வ­ரும் 33 வயது ரமேஷ்.

கடந்த ஓராண்­டாக தேசிய அணி­யு­டன் சேர்ந்து பயிற்சி மேற்­கொண்­டு­வ­ரும் திரு திலிபன், 29, எதிர்­வ­ரும் ஆசிய ஆண்­கள் பிரி­மி­யர் கிண்­ணப் போட்­டி­யில் ஓர­ணி­யா­கச் சேர்ந்து எதி­ர­ணி­களை வீழ்த்­தும் முனைப்­பில் உள்­ளார்.

திரு­வா­ரூர் மாவட்­டம், பர­வாக்­கோட்­டை­யைச் சேர்ந்த திரு திலி­பன், மாலை எட்டு மணி­வரை நீடிக்­கும் பணிச்­சு­மைக்­கிடையே, வாரம் நான்கு முறை இரவு நேரத்­தில் பயிற்சி செய்­வதற்கு நேரம் ஒதுக்கி வரு­கி­றார்.

வரும் வாரங்­களில் ஹாங்­காங், ஐக்­கிய அர­பு சிற்­ற­ர­சு­கள் (யுஏஇ), பஹ்­ரேன், குவைத் ஆகிய அணி­களை சிங்­கப்­பூர் களத்­தில் சந்­திக்­கும்.

ஹாங்­காங்­கும் 'யுஏஇ'யும் கடும் போட்டி தரக்­கூ­டும் என எதிர்­பார்க்­கும் திரு திலி­பன், இருந்­தா­லும் இவ்­வாய்ப்பை முழு­தா­கப் பயன்­ப­டுத்தி, திறம்­ப­டச் செயல்­ப­டு­வ­தற்குத் தம்­மா­லான வரை­யில் முயற்சி செய்­ய­வி­ருப்­ப­தா­க­வும் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

திரு ரமே­ஷின் அர்ப்­ப­ணிப்­பை­யும் கடும் உழைப்­பை­யும் கடந்த மூன்­றாண்­டு­க­ளாக கண்­டுள்ள மில்­லெ­னி­யம் யுனை­டெட் கிரிக்­கெட் குழு­வின் திரு சுவாமி­ரா­ஜன் சக்­தி­த­ரன், தேசிய அணிக்கு அவர் தேர்­வா­ன­தில் தமது குழு பெரு­மை­கொள்­வ­தாகத் தெரி­வித்­தார்.

"குழு­விற்கு அவர் பெரிய பலம். பந்­து­வீச்­சில் மட்­டு­மின்றி, பந்­த­டிப்­பி­லும் அவர் வல்­ல­வர். அவ­ரின் பந்­து­வீச்­சில் ஓட்­டம் சேர்க்க பல­ரும் சிர­மப்­ப­டு­வர்," என்­றார் திரு சக்­தி­த­ரன்.

கடந்த ஆண்டு உட­லு­று­தியை முன்­னி­லைப்­ப­டுத்தி, ஓட்­டப் பயிற்சி, கட்­டுப்­பா­டான உணவு­முறை வாயி­லாக, திரு ரமேஷ் பத்து கிலோ எடை குறைத்­த­தை­யும் அவர் குறிப்­பிட்டுப் பாராட்­டி­னார்.