பொருளியல், வேலைகளுக்கு முன்னுரிமை

பொருளியல், வேலைகளுக்கு முன்னுரிமை

2 mins read

பண­வீக்­கம் தொடர்ந்து அதி­க­மாக இருக்­கக்­கூ­டும். அது­மட்­டு­மல்­லாது, புவிசார் அரசியல் சூழல் மேலும் பிள­வ­டை­யக்­கூடும். இருப்­பி­னும், நீடித்த நிலைத்­தன்மை உள்ள பொரு­ளி­யல் வள­ரச்­சியை உறுதி செய்ய சிங்­கப்­பூர் தீவி­ர­மாக முயற்சி செய்­யும் என்று தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

நேற்று நாடா­ளு­மன்­றம் கூடி­யது. அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பின் உரை­யின் பிற்­சேர்க்­கை­யாக இந்­தக் கருத்­து­களை வர்த்­தக, தொழில் அமைச்சு சேர்த்­துக்­கொண்­டது.

நாட்­டின் பொரு­ளி­யலை மேம்­ப­டுத்­த­வும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு மேலும் பல வேலை­களை உரு­வாக்­க­வும் உல­க­ளா­விய விநி­யோ­கச் சங்­கிலி, சந்­தை­கள் ஆகி­ய­வற்­றில் சிங்­கப்­பூர் கூடு­தல் கவ­னம் செலுத்த இருப்­ப­தாகவும் அமைச்சு கூறி­யது.

வர்த்­த­கங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­க­வும் புதிய வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் இந்த அணு­கு­முறை கடைப்­பி­டிக்­கப்­படு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, நீடித்த நிலைத்­தன்மை உள்ள பண­வீக்­க­மற்ற பொரு­ளி­யல் வளர்ச்­சியை ஏற்­ப­டுத்த முயற்­சி­கள் எடுக்­கப்­படும் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கூறி­யது.

ஆசி­யா­வில் அனைத்­து­லக நிதி மையாக சிங்­கப்­பூர் வகிக்­கும் இடத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்ளத் தேவை­யான நட­வடிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்று அது தெரி­வித்­தது.

அடுத்த சில மாதங்­களில் தொடர்ந்து அதி­க­மாக இருக்­கும் உல­க­ளா­விய பண­வீக்­கம், உல­க­ளா­விய தேவை­கள் பல­வீனம் அடைந்­தி­ருப்­பது ஆகி­யவை சிங்­கப்­பூரின் வளர்ச்­சி­யைப் பாதிக்­கும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், பொரு­ளி­யல் வளர்ச்­சிக்­கும் வேலை­க­ளுக்­கும் முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

ஏற்­கெனவே இருக்­கும் பொரு­ளி­யல் நிலை, வேலை­களைப் பாது­காக்­கும் அணு­கு­முறையை மற்ற நாடு­கள் கடைப்­பி­டிக்­கக்­கூ­டும் என்று குறிப்­பிட்ட திரு கான், சிங்­கப்­பூர் அதன் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை விரி­வு­ப­டுத்­தும் என்று கூறி­னார். உல­க­ளா­விய விநி­யோ­கச் சங்­கி­லி­களில் சிங்­கப்­பூ­ரின் ஈடு­பாடு மேலும் ஆழ­மா­ன­தாக இருக்­கும் என்­றார் அவர்.

"நாம் கடைப்­பி­டிக்­கும் அணுகு­முறை உல­க­ளா­விய வர்த்­தக மைய­மாக சிங்­கப்­பூர் கொண்­டுள்ள நிலையை வலுப்­படுத்­தும். சிங்­கப்­பூ­ரில் உயர் மதிப்­புள்ள பொரு­ளி­யல் நட­வடிக்­கை­கள் நங்­கூ­ர­மி­டப்­படும். தர­முள்ள வேலை­கள் உரு­வாக்­கப்­படும்.

"புதிய வாய்ப்­பு­களை நழு­வ­வி­டா­மல் அவற்­றைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள அனைத்­து­ல­கப் பங்­கா­ளி­க­ளு­ட­னான உற­வு­களை சிங்­கப்­பூர் வலுப்­ப­டுத்­திக்­கொள்­ளும்," என்­றார் அமைச்­சர் கான். முக்­கியப் பங்­கா­ளி­களின் வர்த்­த­கச் சந்­தை­களில் சிங்­கப்­பூ­ரின் கூடு­தல் ஈடு­பாட்டை உறுதி செய்ய, எல்லை தாண்­டிய கட்­ட­ணம் செலுத்­தும் முறைக்­கான இணைப்பை மேம்­ப­டுத்­து­வ­தில் மத்­திய வங்கி தீவி­ரம் காட்­டு­வ­தாக ஆணை­யத்­தின் தலை­வ­ரும் மூத்த அமைச்­ச­ரு­மான தர்­மன் சண்­மு­க­ரத்­னம் கூறி­னார்.

அது­மட்­டு­மல்­லாது, புத்­தாக்­க­மிக்க, பொறுப்­பு­ணர்­வு­மிக்க மின்­னி­லக்கக் கட்­ட­மைப்பை ஆணை­யம் உரு­வாக்­கும் என்­றார் திரு தர்­மன்.