'நாட்டின் மீள்திறனை வலுப்படுத்த வேண்டும்'

'நாட்டின் மீள்திறனை வலுப்படுத்த வேண்டும்'

2 mins read

மிரட்டல்களைக் கையாள்வது குறித்து அமைச்சுகள்

நாட்­டின் மீள்­தி­றனை வலுப்­ப­டுத்­து­வ­தும் புதிய மிரட்­டல்­க­ளைச் சமா­ளிப்­ப­தும் அவ­சி­யம் என்று தற்­காப்பு அமைச்சு, வெளி­யு­றவு அமைச்சு, உள்­துறை அமைச்சு ஆகி­யவை வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

அதி­பர் உரை தொடர்­பான பிற்­சேர்க்­கை­யில் அமைச்­சு­கள் இவ்­வாறு கூறின.

புவி­சார் அர­சி­யல், பாது­காப்பு ஆகிய அம்­சங்­களில் நிச்­ச­ய­மற்ற தன்மை நில­வும் வேளை­யில், சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டையை உரு­மாற்­ற­வும் தேசிய சேவை­யை­யும் தற்­காப்பு ஒத்­து­ழைப்­பை­யும் வலுப்­ப­டுத்­த­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் கூறி­னார்.

வலு­வான தற்­காப்பு நாட்­டின் இறை­யாண்­மை­யைப் பாது­காத்து அமை­தியை உறு­தி­செய்­யும் என்­றார் அவர். புதிய தொழில் நுட்­பங்­க­ளைப் பயன்­படுத்­து­தல், மின்­னி­லக்­கத் திறனை மேம்­ப­டுத்­து­தல், செயற்கை நுண்­ண­றிவு போன்­றவை தமது அமைச்­சின் முக்­கிய முன்­னு­ரி­மை­கள் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரின் தற்­காப்­புக்கு தேசிய சேவை வலு­வான அடித்­த­ளம் என்று கூறிய அமைச்­சர், வருங்­கா­லத்­தில் தேசிய சேவை­யா­ளர்­கள் மேம்­பட்ட அனு­ப­வம் பெற வகை­செய்­யப்­படும் என்­றார்.

வெளி­யு­றவு அமைச்­சின் நட­வ­டிக்­கை­கள் இதற்கு வலு சேர்க்­கும்.

மலே­சியா, இந்­தோ­னீ­சியா, புருணை போன்ற அண்டை நாடு­க­ளு­டன் பல்­வேறு அம்­சங்­களில் ஒத்­து­ழைப்பை விரி­வு­படுத்­து­வ­தற்கு அது முன்­னு­ரிமை தரும் என்று வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கூறி­னார்.

சிங்­கப்­பூர் தற்­போது உல­கின் பாது­காப்­பான நாடு­களில் ஒன்­றாக விளங்­கி­னா­லும் குறிப்­பி­டத்­தக்க, புதிய மிரட்­டல்­களைச் சமா­ளிக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் சுட்­டி­னார்.

பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போர், இணை­யத் தாக்­கு­தல்­கள் போன்­ற­வற்­றைக் குறிப்­பிட்ட அவர், புதிய மிரட்­டல்­களை எதிர்­கொள்­ளும் வகை­யில் சிங்­கப்­பூ­ரின் சட்­டங்­களில் திருத்­தங்­கள் செய்­யப்­படும் என்­றார்.

பொது­மக்­க­ளின் விழிப்­பு­ணர்வு, பகுத்­த­றி­யும் தன்மை போன்­ற­வை­யும் நாட்­டின் பாது­காப்­பில் முக்­கி­யப் பங்கு வகிப்­ப­தாக அமைச்­சர் கூறி­னார்.