நாயை கைதுசெய்ய பெண்கள் புகார்

நாயை கைதுசெய்ய பெண்கள் புகார்

1 mins read

இந்தியாவின் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி படம் உள்ள சுவரொட் டியை நாய் ஒன்று தனது வாயால் கிழிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

இதனை அரசியலாக்க எதிர்த்தரப்பு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பெண்கள் முயன்றனர். அக்கட்சியைச் சேர்ந்த தாசரி உதயஸ்ரீ என்பவர் சில பெண்களுடன் காவல் நிலையம் சென்று, ஆளும் கட்சியைக் கிண்டல் செய்யும் விதமாக, முதல்வரின் படத்தைக் கிழித்த நாயைக் கைதுசெய்ய வேண்டும் என்று எழுத்துபூர்வ புகார் அளித்து உள்ளார்.

"151 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்த தலைவரை ஒரு நாய் அவமானப்படுத்திவிட்டது. இது மாநிலத்தின் 6 கோடி மக்களுக்கும் அவமானம்," என்று கிண்டல் செய்யும் வார்த்தைகள் அந்தப் புகாரில் இடம்பெற்றன.

புகாரின் நோக்கம் முதல்வரை அசிங்கப்படுத்து வது என்பதை அறிந்ததால் எதிர்க்கட்சியினர் அளித்த புகாரைப் பதிவுசெய்ய வில்லை என்று விஜயவாடா காவல்துறை அதிகாரி கான்டி ராணா டாடா கூறியுள்ளார். புகார் கடிதமும் சமூக ஊடகங்களில் பரவுகிறது.