தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு; குண்டர் கும்பல் கைதிகள் சுட்டுக்கொலை

2 mins read
7ce88a1c-215d-4eb4-95ee-30571c242469
-

இந்­தி­யா­வின் சமாஜ்­வாடி கட்­சி­யின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆதிக் அக­மது.

கொலை வழக்­கு­கள் தொடர்­பில் கடுங்­கா­வல் தண்­ட­னை­யும் ஆயுள் தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்ட ஆதிக் அக­ம­தும் அவ­ரது சகோ­த­ர­ரும் அக­ம­தா­பாத் சிறை­யில் தண்­ட­னையை நிறை­வேற்­றி­வந்­த­னர்.

மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­காக உத்­த­ரப் பிர­தேச மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்ட வேளை­யில், காவல்­து­றை­யி­னர் முன்­னி­லை­யில் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த இரு­வ­ரும் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர்.

செய்­தி­யா­ளர்­கள் என்று கூறி அங்கு வந்த சிலர் ஆதிக் அம­க­தை­யும் அவ­ரது சகோ­த­ர­ரை­யும் சுட்­டுக் கொன்­ற­தா­கத் தெரிவிக்கப்பட்டது.

அர­சி­ய­லுக்கு வரு­முன்பு குண்­டர் கும்­பல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த ஆதிக் மீது 2005ஆம் ஆண்டு பகு­ஜன் சமாஜ் கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ராஜ் பால் கொலை செய்­யப்­பட்­டது, இந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் ராஜ் பாலின் வழக்­க­றி­ஞர் உமேஷ் பால் கொலை செய்­யப்­பட்­டது இரண்­டின் தொடர்­பி­லும் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

வழக்­க­றி­ஞர் உமேஷ் பால் கொலை வழக்­கில் ஆதிக் அக­ம­தின் மகன் ஆசாத், அவ­ரது நண்­பர் குலாம் இரு­வ­ரும் குற்­ற­வா­ளி­க­ளாக அறி­விக்­கப்­பட்­ட­னர்.

தலை­ம­றை­வான அவ்­வி­ரு­வர் குறித்­தும் தக­வல் அளிப்­போ­ருக்கு சன்­மா­னம் அறி­விக்­கப்­பட்ட நிலை­யில், இம்­மா­தம் 13ஆம் தேதி ஜான்சி நக­ரில் ஆசாத்­தும் குலா­மும் காவல்­து­றை­யி­ன­ரு­டன் ஏற்­பட்ட மோத­லில் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் சிகிச்­சைக்­காக பிர­யாக்­ராஜ் அழைத்­துச் செல்­லப்­பட்ட ஆதிக்­கை­யும் அவ­ரது சகோ­த­ர­ரை­யும் சுட்­டுக் கொன்­ற­பின் தப்­பி­யோ­டிய மூவ­ரைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

சம்­ப­வத்­தைத் தொடர்ந்து உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆதிக் அக­மது கொலைச் சம்­ப­வம் தொடர்­பில் மூன்று பேர் கொண்ட உயர்­நி­லைக் குழு­வின் விசா­ர­ணைக்கு மாநில முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் உத்­த­ர­விட்­டுள்­ளார். குழு அதன் அறிக்கையை இரு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாநி­லத்­தில் சட்­டம், ஒழுங்கு கட்­டிக்­காக்­கப்­ப­டு­வதை உறு­தி­செய்­யும்­படி காவல்­து­றை­யி­டம் அவர் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

செய்­தி­யா­ளர்­கள்­போல் வேட­மிட்­ட­வர்­கள், காவல்­து­றை­யி­ன­ரின் முன்­னி­லை­யில் ஆதிக் அக­மதை சுட்­டுக் கொன்­ற­தை­ அடுத்து செய்­தி­யா­ளர் பாது­காப்­புக்­கான வழி­காட்டு நெறி­மு­றை­களை வெளி­யிட இந்­தி­யா­வின் மத்­திய உள்­துறை அமைச்சு முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.