ஜப்பானிய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: ஐந்து சடலங்கள் மீட்பு

ஜப்பானிய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: ஐந்து சடலங்கள் மீட்பு

1 mins read
67dcda6a-48cc-4fb4-a860-18e53debb9b8
-

ஜப்­பா­னில் விழுந்து நொறுங்­கிய ராணுவ ஹெலி­காப்­ட­ரில் இருந்து ஐந்து சட­லங்­களை மீட்­புப் படை­யி­னர் மீட்­டுள்­ள­தாக கியோடோ செய்தி நிறு­வ­னம் தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

அந்த ஹெலி­காப்­ட­ரில் பத்­துப் பேர் பய­ணம் செய்­த­தா­கக் கூறப்­பட்­டது.

மூத்த அதி­கா­ரி­யான லெஃப்டி­னென்ட் ஜென­ரல் யுய்சி சகா­மோ­டோ­வும் அவர்­களில் ஒரு­வர்.

இம்­மா­தம் 6ஆம் தேதி, ஒக்­கி­னா­வா­வில் உள்ள மியாகோ தீவின் வான்­வெ­ளி­யில் பறந்து கொண்­டி­ருந்த அந்த ஹெலி­காப்­டர் ரேடார் கண்­கா­ணிப்­புத் திரை­யி­லி­ருந்து மறைந்­தது.

மறு­நாள் அதன் கதவு, உடைந்த சுழல் இறக்கை உள்­ளிட்ட சில பாகங்­க­ளைக் கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் கண்டு எடுத்­த­னர்.

நேற்று மீட்­கப்­பட்ட சட­லங்­கள் குறித்த மேல்­வி­வ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. விபத்­துக்­கான கார­ணம் இன்­னும் தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

ஜப்­பா­னிய ராணு­வத்­தில் எப்­போ­தா­வது இத்­த­கைய விபத்­து­கள் நிகழ்­வ­துண்டு.

சென்ற ஆண்டு ஜப்­பா­னிய போர் விமா­னம் ஒன்று இஷி­காவா வட்­டா­ரத்­தில் கட­லில் விழுந்­த­தில் அவ்விமானத்தின் விமா­னி­கள் இரு­வ­ரும் உயிரிழந்தனர்.

2019ஆம் ஆண்டு வட­கிழக்கு ஜப்­பா­னில் பயிற்­சி­யில் ஈடு­பட்­டு இருந்த எஃப்-35ஏ ரக போர் விமா­னம் கிளம்­பிய சிறிது நேரத்­தி­லேயே கட­லில் விழுந்­தது. அதன் விமானி அவ்விபத்தில் உயிரிழந்தார்.