சூடானில் மூன்றாவது நாளாகத் தொடரும் மோதல்கள்; ஏறக்குறைய 100 பேர் பலி

சூடானில் மூன்றாவது நாளாகத் தொடரும் மோதல்கள்; ஏறக்குறைய 100 பேர் பலி

2 mins read
7d29d17e-b0fd-4dbe-837b-940f224328e7
-

சூடா­னில் மூன்று நாள்­க­ளாக ராணு­வத்­திற்­கும் 'ஆர்­எஸ்­எஃப்' எனும் துணை ராணு­வப்­ப­டைக் குழு ஒன்­றிற்­கும் இடை­யில் நடை­பெ­றும் தீவிர மோதல்­களில் ஏறத்­தாழ 100 பேர் உயி­ரி­ழந்­த­னர். 1,100 பேர் காய­முற்­ற­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

உயிரிழந்தோரில் ஐக்கிய நாட்டு நிறுவன உலக உணவுத் திட்ட ஊழியர்கள் மூவரும் அடங்குவர்.

சண்டையிடும் இரு­த­ரப்­பும் தலை­ந­கர் கார்ட்­டூ­மின் முக்­கி­யப் பகு­தி­க­ளைக் கைப்­பற்றுவதில் முனைந்துள்­ளன.

வெடிப்­புச் சத்­தங்­கள் காதைப் பிளப்­ப­தா­கக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

உள்­ளூர் நேரப்­படி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை­யில் சிறிது நேரம் சண்டை நிறுத்­தம் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.

காய­ம­டைந்­த­வர்­களை வெளி­யேற்­று­வ­தற்கு அவ­கா­சம் தரும் நோக்­கில் அவ்­வாறு செய்­யப்­பட்­ட­தா­கச் சொன்­னா­லும் எந்த அள­விற்கு சண்டை நிறுத்­தம் அம­லில் இருந்­தது என்று தெளி­வான தக­வல் இல்லை.

கார்ட்­டூம் மருத்­து­வ­ம­னை­களில் நிலைமை மிக­வும் கடி­ன­மாக இருப்­ப­தாக மருத்­து­வர்­கள் கூறி­னர். மோதல்­க­ளால் மருத்­துவ ஊழி­யர்­களும் மருத்­து­வப் பொருள்­களும் காய­ம­டைந்­தோ­ரைச் சென்­ற­டை­வ­தைத் தடுப்­ப­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

நேற்­றும் நேற்று முன்­தி­ன­மும் கார்ட்­டூ­ம் நகரில் உள்ள அதி­பர் மாளிகை, பக்­கத்து நக­ரான ஓம்­ட­மான், மேற்­கில் டாஃபர், வடக்­குப் பகு­தி­யில் அமைந்­தி­ருக்­கும் மெரோவி விமான நிலை­யம் ஆகி­ய­வற்­றைக் கைப்­பற்­றி­யி­ருப்­ப­தாக ஆர்­எஸ்­எஃப் கூறி­யது.

பின்­னர் விமான நிலை­யம் ராணு­வத்­தின் கட்­டுப்­பாட்­டிற்­குள் வந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

ஆகா­யத் தாக்­கு­த­லுக்­குப் பிறகு ராணு­வத்­தின் கை ஓங்கி­இருப்­ப­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் சூடா­னில் உள்ள சிலர் கூறி­னர்.

கார்ட்­டூம் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பீதி­ய­டைந்­துள்­ள­னர். 24 மணி நேரத்­துக்­கு­மேல் தூங்­க­வில்லை என்­றும் உணவு, தண்­ணீர், மருந்­துப் பொருள்­கள் தட்­டுப்­பாடு நேர­லாம் எனக் கவ­லைப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­கள் கூறி­ய­தாக ராய்ட்­டர்ஸ் குறிப்­பிட்­டது.

வன்­செ­யல்­க­ளுக்கு நிரந்­த­ரத் தீர்வு காணும்­படி அனைத்­து­ல­கத் தரப்­பி­னர் கூட்­டாக வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். அரே­பிய நாடு­கள், அமெ­ரிக்கா, ஆப்­பி­ரிக்க ஒன்­றி­யம், எகிப்து, தெற்கு சூடான் போன்­றவை சூடா­னில் மக்­க­ளாட்­சியை மீண்­டும் மலர வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களுக்கு ஆத­ரவு நல்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளன.