இரட்டைக் குழந்தை மரணம்: குறைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள இணக்கம்

இரட்டைக் குழந்தை மரணம்: குறைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள இணக்கம்

1 mins read
500ab3e1-1a19-4e94-9e5d-a546012cc407
-

அப்­பர் புக்­கிட் தீமா­வில் கடந்த ஆண்டு தம் 11 வயது இரட்டை மகன்­க­ளின் கழுத்தை நெரித்­துக் கொன்­ற­தா­கக் கூறப்­படும் தந்தை, நோக்­க­மில்லா மர­ணம் விளை­வித்த குற்­றச்­சாட்டை ஒப்புக்­கொள்ள இருக்­கி­றார்.

சேவி­யர் யாப் ஜுங் ஹவ்ன், 49, காணொளி இணைப்பு வழி­யாக நீதி­மன்­றத்­தில் நேற்று முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார். அவ­ரது வழக்கு விசா­ர­ணைக்கு முந்­திய கலந்­து­ரை­யா­டல் மே 26ஆம் தேதி உயர் நீதி­மன்­றத்­தில் நடை­பெ­றும்.

2022 ஜன­வரி 21ஆம் தேதி மாலை 4.25 மணிக்­கும் 6.20 மணிக்­கும் இடையில் கிரீன்­ரிட்ஜ் கிர­சென்ட் விளை­யாட்டுத் திடல் அருகே மூடப்­பட்ட கால்­வாய் ஒன்றில் ஆஸ்­டன் யாப் காய் ஷெர்ன், ஈதன் யாப் ஈ செர்ன் எனும் தமது இரட்டை மகன்­களைக் கொன்­ற­தாக சேவி­யர் யாப் மீது ஆரம்­பத்­தில் குற்றஞ்­சாட்­டப்­பட்டு இருந்­தது.

இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் அந்த கொலைக் குற்­றச்­சாட்டு, நோக்­க­மில்லா மர­ணம் விளை­வித்த குற்­றச்­சாட்­டாக குறைக்­கப்­பட்­டது. மன­ந­லக் கழ­க அறிக்கையில் யாப்புக்கு மனநலப் பாதிப்பு இருப்பதாகக் கூறப்பட்டிருந்ததை அடுத்து, அவர் மீதான குற்­றச்­சாட்டு குறைக்­கப்­பட்­ட­தாக அரசு வழக்­கறி­ஞர்­கள் கூறியிருந்தனர்.