தாமதமடைந்த பிடிஓ வீட்டுத் திட்டங்களில் 63 விழுக்காடு நிறைவு

தாமதமடைந்த பிடிஓ வீட்டுத் திட்டங்களில் 63 விழுக்காடு நிறைவு

2 mins read

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வல் கார­ண­மாக தாம­த­ம­டைந்த பிடிஓ திட்டங்களில் கிட்­டத்­தட்ட 63 விழுக்­காட்டை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் முடித்துவிட்டது. தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று இதனை தமது ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார்.

கடந்த ஈராண்­டு­களில் முடிக்­கப்­பட்ட 58 பிடிஓ திட்­டங்­களை இது குறிக்­கும். மேலும், கடந்த மாதம் நிறை­வு­பெற்ற சுவா சூ காங்­கில் உள்ள கியட் ஹோங் வெர்ஜ் திட்­ட­மும் இத­னுள் அடங்­கும்.

இந்­தத் திட்­டத்­திற்­கான காத்­தி­ருப்­புக் காலம் கிட்­டத்­தட்ட ஈராண்­டு­கள் என்று தெரி­வித்த திரு லீ, 2020ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்ட கொவிட்-19 முறி­யடிப்பு (சர்­கிட் பிரேக்­கர்) காலத்­தி­லி­ருந்து தாம­த­மின்றி முடித்­துத் தரப்­பட்ட முதல் பிடிஓ திட்­டம் இது என்­றார்.

"மாதத்­திற்கு சரா­ச­ரி­யாக ஒன்று அல்­லது இரண்டு வீவக பிடிஓ திட்­டங்­களே முடிக்­கப்­பட்டு வந்த நிலை­யில் கடந்த (மார்ச்) மாதம் ஏழு திட்­டங்­கள் முடிக்­கப்­பட்­டன.

"2017ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் ஒரு மாதத்­தில் ஆக அதி­க­மான பிடிஓ திட்­டங்­கள் முழு­மை­அடைந்­தது அந்த மாதத்­தில்­தான்," என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

வெற்­றி­க­ர­மாக முடிக்­கப்­பட்ட மற்­றொரு பிடிஓ திட்­டம், உட்­லண்ட்­ஸில் உள்ள மார்­சி­லிங் குரோவ். முன்­னாள் முதல்­நிலை குத்­த­கை­யா­ளர் கிரேட்­எர்த் நிறு­வ­னம் கலைக்­கப்­பட்­ட­தன் கார­ண­மாக அந்­தத் திட்­டம் பாதிக்­கப்­பட்­டது.

புக்­கிட் பாத்­தோக்­கில் உள்ள ஸ்கை விஸ்டா, புக்­கிட் பாஞ்­சாங்­கில் உள்ள செஞ்சா ஹைட்ஸ் மற்­றும் செஞ்சா ரிட்­ஜஸ், கிள­மெண்­டி­யில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் பார்க்­வியூ ஆகிய திட்­டங்­க­ளின் முதல்­நிலை குத்­த­கை­யா­ள­ராக அந்­நி­று­வ­னம் இருந்­தது.

அதி­க­மான நிறு­வ­னப் பொறுப்பு­கள் கார­ண­மாக இந்­தத் திட்­டங்­க­ளைத் தொடர இய­ல­வில்லை என்று கிரேட்­எர்த் அறி­வித்­த­தன் கார­ண­மாக அந்­தத் திட்­டங்­களின் கட்­டு­மா­னப் பணி­கள் அனைத்­தும் 2021ஆம் ஆண்டு நிறுத்­தப்­பட்­டன.

"இவ்­வாறு திடீ­ரென்று கையை விரித்­து­விட்­ட­தால், நின்று­போன திட்­டங்­களை எல்­லாம் முடிப்­பது அவ்­வ­ளவு எளி­தல்ல.

"இருப்­பி­னும், வீவ­க­வின் சார்பு அமைப்­பு­களும் குத்­த­கை­யா­ளர்­களும் ஒன்­றி­ணைந்து மேற்­கொண்ட தொடர் முயற்­சி­க­ளின் கார­ண­மாக, அறி­விக்­கப்­பட்ட காலத்­தி­லேயே கட்­டு­மா­னப் பணி­களை முடித்து வீடு­களை விநி­யோ­கித்­தோம். அதே­நே­ரம் தரத்­திலோ பாது­காப்­பிலோ எவ்­வித சம­ர­ச­மும் காட்­டப்­ப­ட­வில்லை.

"கிரேட்­எர்த் விட்­டுப்­போன திட்­டங்­களில் எஞ்­சி­யி­ருப்­பது வெஸ்ட் கோஸ்ட் பார்க்­வியூ மட்­டும்­தான். இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் அது முடிக்­கப்­பட்டு வீடு­கள் ஒப்­ப­டைக்­கப்­படும்," என்­றார் திரு லீ.

தாம­த­ம­டைந்த வீடு­க­ளின் விகி­தம், கொவிட்-19 தடை­கள் தணிந்­த­தா­லும் வெளி­நாட்டு ஊழி­யர் நில­வ­ரம் மேம்­பட்­ட­தா­லும் 2021ஆம் ஆண்டு குறை­யத் தொடங்­கி­ய­தாக கடந்த பிப்­ர­வரியில் வீவக கூறி­யது.

2022ஆம் ஆண்டு 20,000க்கும் மேற்­பட்ட வீடு­கள் கட்­டி­மு­டிக்­கப்­பட்டு, அவற்­றில் 17,000 வீடு­க­ள் வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளி­டம் வழங்­கப்­பட்­டன.

இந்த விகி­தம் அதற்கு முந்­திய ஆண்­டைக்காட்­டி­லும் 15 விழுக்காடு அதி­கம்.