இந்தியாவின் முதல் 'ஆப்பிள்' விற்பனையகம்

இந்தியாவின் முதல் 'ஆப்பிள்' விற்பனையகம்

1 mins read
df41521b-2315-45e2-a6f5-a7de8f5cab5f
-

ஆப்­பிள் நிறு­வ­னம் இந்­தி­யா­வில் நேற்று தனது முதல் விற்­பனை நிலை­யத்தை மும்­பை­யில் திறந்­தது.

ஏரா­ள­மா­னோர் முன்­னி­லை­யில் அந்­நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி டிம் குக் இதனை நேற்­றுக் காலை திறந்து வைத்­தார். பின்­னர் அங்­கி­ருந்த பல­ரும் அவ­ரு­டன் செல்ஃபி எடுத்­துக்­கொண்­ட­னர்.

இந்­தி­யா­வில் ஆப்­பிள் நிறு­வனம் கால்­ப­தித்து 25 ஆண்­டு­கள் ஆன நிலை­யில் அதனை நினை­வு­றுத்­தும் வகை­யில் புதிய விற்­பனை நிலை­யம் திறக்­கப்­பட்­டுள்­ளது.

இசை­ய­மைப்­பா­ளர் ஏ.ஆர். ரகு­மான், ஐஸ்­வர்யா ரஜி­னி­காந்த், நடிகை மாதுரி தீக்ஷித் உள்­ளிட்ட பல திரை­யு­ல­கப் பிர­மு­கர்­களும் ஆப்­பிள் திறப்பு விழா­வில் கலந்­து­கொண்­ட­னர்.

புதிய விற்­பனை நிலை­யத்­தில் ஆப்­பிள் ஐஃபோன், ஆப்­பிள் கைக்­க­டி­கா­ரம் போன்­ற­வற்றை வாங்க பலர் முதல் நாள் இர­வி­லி­ருந்தே வரி­சை­யில் காத்­தி­ருந்­த­னர்.

அவர்­களில் பலர், மறைந்த ஆப்­பிள் இணை நிறு­வ­னர் ஸ்டீவ் ஜாப் படம் பொறித்த டி-சட்டை அணிந்­தி­ருந்­த­னர். வேறு சிலர், ஆப்­பிள் நிறு­வன சின்­னம்­போல தங்­க­ளது தலை­மு­டியை திருத்தி இருந்­த­னர்.

ஆப்­பிள் பொருள்­க­ளின் தயா­ரிப்பை சீனா­வி­லி­ருந்து மாற்­று­வதற்­கும் விற்­ப­னை­யைச் சந்­தைப்­ப­டுத்­து­வ­தற்­கும் தென்­கி­ழக்கு ஆசி­யா­மீது ஆப்­பி­ளின் கவ­னம் திரும்பி இருக்­கிறது.