தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறிய கார்களுக்கான 'சிஓஇ' கட்டணம் $103,721

1 mins read
6c2b5d9a-874a-497f-aa31-3c5fbcd75829
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் 1,600 சிசி வரையிலான கொள்ளளவைக் கொண்ட சிறிய கார்களின் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் 103,721 வெள்ளியைத் தொட்டுள்ளது.

110 கிலோவாட் வரையிலான சக்தி கொண்ட மின்சார வாகனங்களும் இப்பிரிவில் அடங்கும்.

சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் இவ்வளவு அதிகமாகப் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை.

பெரிய கார்கள், கூடுதல் சக்திவாய்ந்த மின்சார வாகனங்கள் ஆகியவற்றைக் கொண்ட பிரிவில் கட்டணம் 2.02 விழுக்காடு அதிகரித்து 120,889 வெள்ளியாகப் பதிவானது.

வர்த்தக வாகனங்களுக்கான பிரிவில் 'சிஓஇ' கட்டணம் 1.91 குறைந்து 75,334 வெள்ளியாகப் பதிவானது.

இப்பிரிவில் மட்டும்தான் இம்முறை கட்டணம் அதிகரிக்கவில்லை.

மோட்டார் சைக்கிள்களுக்கான பிரிவில் கட்டணம் 1.48 விழுக்காடு கூடி 12,179 வெள்ளியைத் தொட்டது.