புகைமூட்டம், வெப்பம்: மலேசியா எச்சரிக்கை

புகைமூட்டம், வெப்பம்: மலேசியா எச்சரிக்கை

1 mins read

மலே­சி­யா­வின் சில பகு­தி­களில் வெப்­பம் மிகுந்த பரு­வ­நிலை தொட­ரும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. அதோடு புகை மூட்ட­மும் நில­வு­கிறது.

ஆகை­யால் வெளியே செல்வதைப் பொதுமக்­கள் குறைத்­துக் கொள்­ள­வேண்­டும் என்று சுகாதார அமைச்­சர் டாக்­டர் சலிஹா முஸ்­தபா ஆலோ­சனை கூறியுள்ளார்.

மலே­சி­யா­வின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசு­கிறது. காற்­றுத்­த­ரம் மோச­ம­டைந்­து உள்ளது.­ மெட்மலே­சியா என்ற பரு­வ­நிலை அமைப்­பும் காட்டு­வளம், சுற்­றுப்­புற பரு­வ­நிலை அமைச்சும் அவ்­வாறே தெரிவித்து இருக்­கின்­றன.

சிலாங்­கூ­ரில் ஜோஹான் செத்­தியா, கிளந்­தான் மாநில தலை­ந­கர் கோத்தா பாரு ஆகிய இடங்­களில் காற்­றுத் தரம் மோச­மாக இருக்­கிறது.

"கடும் வெப்­பச் சூழ­லில் மக்­கள் வெளியே செல்­வதை, உடல் உ­ழைப்­பைக் குறைத்­துக்­கொள்­ள­வேண்­டும்.

"பொருத்­த­மான முகக்­கவசத்தை அணிந்­து­கொண்டு புகைமூட்­டத்தை மக்­கள் தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும்.

"வெளியே செல்­லும்­போது குடை­யு­டன் செல்­லுங்­கள். காற்­றில் புகை­யைக் கலக்­கச் செய்­யும் செயல்­களை மக்­கள் நிறுத்­தி­விட வேண்­டும். அதிக தண்­ணீர் குடிக்க வேண்­டும்.

"பலமுறை குளிக்­க­லாம். தரமான குளிர் சாத­னம் மூலம் வீட்­டில் தூசு, புகை புகா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்டும்," என்­றாரவர்.