தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'நோன்புப் பெருநாளில் ஜோகூர் சோதனைச்சாவடி முகப்புகள் அனைத்தும் இயங்க வேண்டும்'

2 mins read
6fe92b08-f9f9-4654-8ec9-884c581701f8
-

நோன்­புப் பெரு­நாள் விடு­முறையை முன்­னிட்டு மலே­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே அதி­க­மா­னோர் பயணம் செய்­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வதால், ஜோகூர் சோத­னைச்­சாவடி­யில் அனைத்து முகப்­பு­களும் தடை­யின்றி செயல்­பட வேண்­டும் என்று ஜோகூர் முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸி கூறி­யி­ருக்­கி­றார்.

ஜோகூர் சோத­னைச்­சா­வ­டி­யின் செயல்­தி­றன் தமது எதிர்­பார்ப்­பு­களுக்கு ஈடுகொடுப்பதாக இல்லை என்ற அவர், தற்­போது சோத­னைச்­சா­வடி முழு அள­வில் இயங்­க­வில்லை என்­றார்.

ஜோகூர் சோத­னைச்­சாவடிக்கு நேற்று முன்தினம் சென்று அங்கு நில­வ­ரத்­தைப் பார்­வை­யிட்ட திரு ஓன் ஹஃபிஸ், "எனது கவ­னிப்­பின்­படி, செயல்­தி­றன் 80 விழுக்­கா­டாக உள்­ளது எனக் கூறு­வேன்," என்று சொன்­னார்.

நோன்­புப் பெரு­நாள் விடு­முறை­யின்­போது உட்­லண்ட்ஸ் கடற்­பா­லம், துவாஸ் இரண்­டாம் இணைப்­புப் பாலம் வழி­யாக பயணம் செய்வோர் மற்றும் வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை இரண்டு மில்­லி­ய­னாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

"சோத­னைச்­சா­வ­டி­யில் நில­வ­ரத்தை நான் பார்­வை­யிட்­ட­தில், ஆள்­பற்­றாக்­குறை கார­ண­மாக சில முகப்­பு­கள் இயங்­க­வில்லை. சாலைப் போக்­கு­வ­ரத்­துத் துறை தொடர்­பான கணி­னிக் கட்­ட­மைப்பு பிரச்­சி­னை­கள் கார­ண­மாக வேறு சில முகப்­பு­கள் செயல்­ப­ட­வில்லை. சாலைப் போக்­கு­வ­ரத்­துத் துறை விவ­காரம் ஓரிரு நாளில் சரி­செய்­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது," என்று திரு ஓன் ஹஃபிஸ் தெரி­வித்­தார்.

"கார்­கள், மோட்­டார்­சைக்­கிள்­கள், பேருந்­துப் பய­ணி­கள், பாத­சா­ரி­கள் ஆகி­யோ­ருக்­கான முகப்­பு­கள் அனைத்­தும் செயல்­பாட்டு நிலை­யில் இருக்­கும்­படி நான் கேட்­டுக்­கொண்­டுள்­ளேன். தொழில்­நுட்ப, ஆள்­பல பிரச்­சினை­கள் அனைத்­தும் விரைந்து தீர்க்­கப்­பட வேண்­டும்," என்­றும் அவர் கூறி­னார்.

குடி­நு­ழை­வுத்­துறை தலைமை இயக்­கு­நர் ருஸ்­லின் ஜுசோ சோத­னைச்­சா­வ­டிக்­குச் சென்று அங்கு நில­வ­ரத்தை ஆராய்­வது முக்­கி­யம் என்று திரு ஓன் ஹஃபிஸ் குறிப்­பிட்­டார்.

"குடி­நு­ழை­வுத்­துறை ஊழி­யர்­க­ளின் நல­னும் கவ­னிக்­கப்­பட வேண்­டும். பய­ணி­க­ளின் வரு­கை­யைச் சமா­ளிக்க அவர்­கள் கடி­ன­மாக உழைக்­கின்­ற­னர். அவர்­க­ளது மிகை­நேர கோரிக்­கை­யைச் செயல்­மு­றைப்­ப­டுத்த நீண்­ட­நே­ரம் எடுத்­துக்­கொள்­ளப்­படு­வ­தாக என்­னி­டம் தெரி­விக்­கப்­பட்­டது. இது விரைந்து தீர்க்­கப்­பட வேண்­டும் என நான் விரும்பு­கி­றேன்," என்று திரு ஓன் ஹஃபிஸ் சொன்­னார்.