இறை நம்பிக்கை போற்றும் திருநாள்; குறைவில்லா அன்பு போதிக்கும் பெருநாள்

இறை நம்பிக்கை போற்றும் திருநாள்; குறைவில்லா அன்பு போதிக்கும் பெருநாள்

2 mins read
5225171a-095a-4e54-b2b5-3093c88c7f74
-

இறை நம்பிக்கைக்கு வலுவூட்டும் நோன்புப் பெரு­நாளை குடும்­பத்­து­டன் கூடி கொண்­டா­டு­வதே மகிழ்ச்சி என்­கின்­ற­னர் வர்த்­தக நிறு­வ­ன­மான ராயல் கிங்ஸ் குழு­மத்­தின் குடும்­பத்­தி­னர்.

சிறு வய­தில் தாய் தந்­தை­யு­டன் மட்­டுமே பெரு­நா­ளைக் கொண்­டாடி வந்த தனக்கு பெற்­றோர், மனைவி, இரு மகன்­கள், ஒரு மகள் என எழு­வர் கொண்ட குடும்­ப­மாக இத்­தி­ரு­நாளை ஒன்­றி­ணைந்து கொண்­டா­டு­வது மட்­டற்ற மகிழ்ச்­சி­யைத் தரு­வ­தா­கக் கூறி­னார் ராயல் கிங்ஸ் இயக்­கு­நர் திரு சிரா­ஜு­தீன் செய்­யது முஹம்­மது, 45.

பெரு­நாள் காலைப்­பொ­ழுதை தொழு­கை­யில் தொடங்கி பிறகு பள்­ளி­வா­சல் தொழு­கை­யில் கலந்து­கொண்ட பின் குடும்­பத்­தி­னர், உற­வி­னர், நண்­பர்­கள் என அனை­வ­ரு­ட­னும் இணைந்து விருந்து உண்டு மகிழ்­வது ஒவ்­வோர் ஆண்­டும் மன­நி­றை­வைத் தரும் என்­றார் திரு சிரா­ஜு­தீன்.

"இறை­வ­னின் அரு­ளால் இன்று உல­கம் நெருக்­கடி காலத்­தி­லி­ருந்து மீண்டு வந்­தி­ருப்­பது நிம்­ம­தி­ய­ளிக்­கிறது," என்று கூறி­னார் சிரா­ஜு­தீ­னின் தந்தை திரு செய்­யது முஹம்­மது, 79.

உல­கில் உள்ள ஒவ்­வொரு உயி­ரும் சம­மா­னது எனும் புரி­த­லை­யும் உண­வின் மதிப்­பை­யும் இந்­நோன்பு காலத்­தில் ஒவ்­வொரு முஸ்­லிம் அன்­ப­ரும் உணர்­வர். நோன்பு கடை­ப்பி­டிக்­கும் ஒவ்­வொரு­வ­ருக்­குள்­ளும் அமை­தி­யும் பொறு­மை­யும் குடி­கொண்டு நற்­பா­தை­யில் வாழ்க்­கையை வழி­நடத்த ஒவ்­வோர் ஆண்­டும் இந்­நோன்பு மாதம் அடித்­த­ள­மி­டு­கிறது என்­றும் திரு செய்­யது முஹம்­மது பகிர்ந்துகொண்­டார்.

மேலும் 9 வய­தி­லி­ருந்து பிள்­ளை­களை­யும் நோன்பு சம­ய­முறைக்கு பழக்­கு­வது மிகச்­சி­றந்­தது என்­றும் இளம்­வ­ய­தி­லேயே நற்­பண்­பு­களை விதைப்­பது எதிர்­கால தலை­முறை செழிப்­பு­டன் வாழ வழி­வ­குக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

சிரா­ஜு­தீ­னின் பாட்­ட­னார் காலத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரில் பல்­வேறு தொழில்­கள் செய்து வந்­துள்ள இக்­கு­டும்­பத்­தி­னர், நோன்பு காலத்­தில் பொரு­ளி­யல் சிர­மத்தை எதிர்­நோக்­கு­வோ­ருக்கு தங்­க­ளால் இயன்ற உத­வி­களை செய்து வரு­கின்­ற­னர். இவ்­வாண்டு 250 குடும்­பங்­களுக்கு நிறு­வ­னத்­தின் சார்­பில் தலா 5 கிலோ அரிசி வழங்­கி­யுள்­ள­னர்.