அமெரிக்காவில் ஆந்திரப் பிரதேச இளையர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் ஆந்திரப் பிரதேச இளையர் சுட்டுக் கொலை

1 mins read

இன்­னும் பத்து நாள்­களில் முது­க­லைப் பட்­டம் பெற­வி­ருந்த 24 வயது இந்­திய மாண­வர் ஒரு­வர் அமெ­ரிக்­கா­வில் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். இந்­தி­யா­வின் ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த சையேஷ் வீரா (படம்) என்­னும் அந்த இளை­யர், படித்­துக்­கொண்டே அமெ­ரிக்­கா­வின் ஓஹையோ மாநி­லத்­தி­லுள்ள கொலம்­பஸ் நக­ரில் பகுதி நேர­மாக எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யத்­தில் வேலை செய்­து­கொண்டு இருந்­தார்.

அந்த எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யத்­திற்கு நேற்று முன்­தி­னம் வந்த மர்ம நபர்­கள் சிலர், அந்த இளை­யரை நோக்கி சர­மா­ரி­யா­கச் சுட்­டு­விட்டு தப்பி ஓடி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது. அது கொள்­ளைக் கும்­பலாக இருக்­க­லாம் என சந்­தே­கி­க்கப்­ப­டு­கிறது.

இன்­னும் இரண்டு வாரத்­தில் பகு­தி­நேர வேலை­யைக் கைவிட நினைத்­தி­ருந்த நேரத்­தில் அந்த இளை­ய­ருக்கு இந்­த கதி நேர்ந்­தி­ருப்­ப­தாக வீராவின் நெருங்­கிய தோழ­ரான புனித் ரகு­பதி, உள்­ளூர் ஊட­கங்­க­ளி­டம் கூறி­னார்.