வெற்றிகரமாக ஏவப்பட்ட சிங்கப்பூரின் செயற்கைக்கோள்

வெற்றிகரமாக ஏவப்பட்ட சிங்கப்பூரின் செயற்கைக்கோள்

1 mins read
aac98a52-0a60-43e6-9ffb-8596baa81060
-

சிங்­கப்­பூ­ரின் டெலி­யோஸ்-2 எனும் செயற்­கைக் கோளை ஏந்­திக்­கொண்டு நேற்று விண்­ணில் சீறிப்­பாய்ந்த இந்­தி­யா­வின் பி.எஸ்.எல்.வி.சி-55 உந்­து­க­ணை­யின் பய­ணம் வெற்­றி­க­ர­மாக அமைந்­தது.

இந்­தி­யா­வின் ஸ்ரீஹ­ரி­கோட்­டா­வில் உள்ள சதீஷ் தவான் விண்­வெளி ஆய்வு மையத்­தில் உள்ள முதல் ஏவு­த­ளத்­தில் இருந்து உந்து­கணை விண்­ணில் ஏவப்­பட்­டது. டெலி­யோஸ்-2 செயற்­கைக் கோளு­டன் 16 கிலோ எடை கொண்ட 'லுமி­லைட்-4' என்ற சிறிய செயற்­கைக்­கோ­ளும் விண்­ணில் ஏவப்­பட்­டது.

நேற்று மதி­யம் இரண்டு செயற்­கைக் கோள்­க­ளை­யும் வெற்­றி­க­ர­மாக குறிப்­பிட்ட பூமி வட்­டப்­பா­தை­யில் இஸ்ரோ விஞ்­ஞா­னி­கள் நிலை­நி­றுத்­தி­னர்.

இதற்கு முன்­னர் 2015ஆம் ஆண்டு டிசம்­பர் 16ஆம் தேதி டெலி­யோஸ்-1 செயற்­கைக்­கோளை பி.எஸ்.எல்.வி. சி-29 எனும் உந்­து­கணை மூலம் வெற்­றி­க­ர­மாக விண்­ணில் நிலை­நி­றுத்­தப்­பட்­டது.

டெலி­யோஸ்-2 செயற்­கைக்­கோள் மூலம் புவி ஆய்வு, இயற்கை பேரி­டர் கண்­கா­ணிப்பு உள்­ளிட்ட பல்­வேறு தக­வல்­களை பெற முடி­யும்.